உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளால் தமிழகத்துக்கு இதுவரை கிடைத்தது என்ன?!- Chennai global investors meets and its benefits

Global.jpg

ஸ்டாலினுக்கு பதில் சொல்லிய அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டுக்கு ஏராளமான முதலீடுகள் வந்ததாக சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். 2021-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, ‘அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டுக்கு முதலீடுகள் வரவில்லை’ என்று தி.மு.க ஆட்சியாளர்கள் விமர்சித்துவந்தனர்.

அதற்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி, “2019-ல் நடைபெற்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மூன்று லட்சத்து 501 கோடி ரூபாய் முதலீட்டில் 10.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் கையெழுத்திடப்பட்டன. இவற்றில் 24,492 கோடி ரூபாய் முதலீட்டில் 1,10,844 பேருக்கு வேலைவாய்ப்பை உறுதி அளித்துள்ள 81 திட்டங்கள் ஒரே ஆண்டில் வணிக உற்பத்தியைத் தொடங்கியிருக்கின்றன. மேலும் 2.20 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 5.33 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உறுதி அளித்துள்ள 191 திட்டங்கள் பல்வேறு நிலையில் முன்னேற்றத்தில் உள்ளன’ என்று தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், ஸ்டாலின் தலைமையிலான அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்துகிறது. சி.ஐ.ஐ உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்படும் இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.5.5 லட்சம் கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்படவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், லட்சம் கோடிகளில் முதலீடுகள் என்கிறார்கள் ஆட்சியாளர்கள். உண்மையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளின் மூலம் மாநிலத்துக்கு கிடைத்த நன்மைகள் என்ன என்பதை மக்கள் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் வெள்ளை அறிக்கை ஒன்றை அரசு வெளியிடுவது நல்லது என்னும் கோரிக்கைகள் தற்போது எழத் தொடங்கி இருக்கிறது!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *