Ramadoss : தேவை 1 லட்சம் ஆசிரியர்கள்; தேர்ந்தெடுக்கப்படுவதோ வெறும் 1500.. அரசு பள்ளிகள் எவ்வாறு முன்னேறும்? – ராமதாஸ்!-ramadoss statement about teachers vacancies

Ramadoss A 1662101015808 1704435492826.jpg

இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பணிகளின் காலியிடங்கள் எல்லாம் அரசுத் தரப்பில் காட்டப்படும் கணக்கு தான். உண்மை நிலை முற்றிலும் மாறுபட்டது. தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட, தொடக்கப்பள்ளிகளில் 1,14,155 வகுப்புகள், நடுநிலைப்பள்ளிகளில் 52,696 வகுப்புகள் என மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். அவற்றுக்கு ஒரு லட்சம் ஆசிரியர்கள் தேவை.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *