“கரூர் மாவட்டத்துக்கு மோடி அரசு துரோகம் இழைத்துவிட்டது!" – குற்றம்சாட்டிய ஜோதிமணி

Jothimani.jpg

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலையில், தனியார் அமைப்பு சார்பில் பெண்களுக்கான நிதி கல்வியறிவு மேம்பாடு குறித்து பயிலரங்கம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜோதிமணி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்து சென்றுள்ளார். திருச்சி விமான நிலையம் யாருக்காக பிரதமர் மோடி திறந்து வைத்து சென்றுள்ளார் என்பதை பார்த்தால், விமான நிலையம் அதானிக்கு தாரைவார்த்து கொடுக்கத்தான் விரிவாக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது. ஏனென்றால், கடந்த 2023 பிப்ரவரி மாதத்தில் ஒன்றிய அரசு 25 விமான நிலையங்களை தனியாருக்கு தாரைவாப்பதாக முடிவெடுத்துள்ளது. இதில், கோவை, சென்னை, திருச்சி ஆகிய மூன்று விமான நிலையங்களும் தனியாருக்கு வழங்கப்படுவதற்காக பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. தனியாருக்கு வழங்கும்பட்சத்தில் பிரதமர் மோடியின் நெருங்கிய கார்ப்பரேட் நண்பரான அதானிக்கு வழங்காமல் இருப்பார் என தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி உறுதி அளிப்பாரா என்று கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் உள்ள ஏழு விமான நிலையங்களை அதானி குழுமத்திற்கு ஒன்றிய அரசு வழங்கி உள்ளது. மும்பை, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், லக்னோ, பெங்களூர் உள்ளிட்ட விமான நிலையங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மக்களது வரிப்பணத்தில் கட்டப்பட்ட விமான நிலையங்கள் ஆகும். குறிப்பாக, அதிக வருவாய் ஈட்டக்கூடிய அதிக பயணிகள் செல்லக்கூடிய விமான நிலையங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டது.

திருச்சியில் மோடி, ஸ்டாலின்

தமிழகத்தில் சாக்கடை கட்டும் ஒப்பந்த முறைக்கு கூட, முறையான ஒப்பந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு சட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வழங்கப்படுகிறது. தனியாருக்கு வழங்குவதற்காகவே விமான நிலையங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்து, புதிய வசதிகளை வழங்கி வருகிறது என காங்கிரஸ் கட்சி நேரடியாக குற்றம் சாட்டுகிறது. வளரும் இந்தியா போன்ற நாடுகள் விமான நிலையங்கள், துறைமுகங்கள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, அதே நேரத்தில், சாதாரண ஏழை எளிய மக்களுக்கும் வளர்ச்சி வேண்டும். தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மத்திய அரசு எவ்வித நிதி உதவியும் அளிக்கவில்லை. தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், ‘அறிவிக்க முடியாது’ என்று நிர்மலா சீதாராமன் ஆணவமாக தெரிவித்தார்.

ஏனென்றால், சுனாமியை கூட ஒன்றிய அரசு தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என தெரிவிக்கிறார். சுனாமி வந்த பொழுது தேசிய பேரிடர் ஆணையம் என்ற ஒன்று அப்போது இல்லை. தமிழ்நாட்டு மக்களையும் தமிழக அரசின் அவமதிக்கும் போக்கை ஒன்றிய அமைச்சர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அதே போன்று, மத்திய அரசு வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதிகளை தமிழகத்திற்கு ஒதுக்கவில்லை. சாதாரண மக்கள், ஒன்றிய அரசின் திட்டத்தில் வீடு கட்டிவிட்டு, அதற்கான முழு தொகையை, இன்னும் பெற முடியாமல், ஊராட்சி பேரூராட்சி அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகளுக்காக காங்கிரஸ் ஆட்சியில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் என்ற தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கிராமங்கள் வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஜோதிமணி

ஆனால், நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்த ஓராண்டில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மூடப்பட்டது. தவிர, தனியாக செயல்பட்டு வந்த ஊரக வளர்ச்சி அமைச்சகத்துடன் இணைத்து, அதற்கு ஒதுக்கப்படும் நிதி அளவையும் ஒன்றிய அரசு குறைத்து வருகிறது. தமிழகத்தில் கரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காமல் இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஏற்றுமதி நகரங்களில் நான்காவது மிகப் பெரிய தொழில் நகரமாக கரூர் உள்ளது. அதிகப்படியான வரியை செலுத்தக்கூடிய மாவட்டமாக கரூர் மாவட்டம் இருந்தும் ஒன்றிய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கரூர் நகரத்திற்கு வழங்கவில்லை. அதிக அளவில் இந்திய நாட்டுக்கு அன்னிய செலாவணியை ஈட்டி தரும், கரூர் மாவட்டத்திற்கு மோடி தலைமையிலான ஒன்றிய அரசு துரோகம் இழைத்து விட்டது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *