Vishal: `LYCA-வின் சொத்துகளை முடக்க வேண்டும்!’ – நடிகர் விஷால் வழக்கு | Actor Vishal filed case against LYCA in madras high court

Whatsapp Image 2024 01 02 At 18 12 53 1 .jpeg

சண்டக்கோழி-2 படத்திற்கான ஜி.எஸ்.டி தொகையை வழங்காத லைகா நிறுவனத்தின் 5 கோடி ரூபாய் அளவிற்கான சொத்துகளை முடக்க வேண்டுமென, நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் விஷால் தாக்கல் செய்துள்ள மனுவில், “என்னுடைய `விஷால் ஃபிலிம் ஃபேக்டரி” பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சண்டக்கோழி-2 திரைப்டத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலைட் வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன், 2018-ம் ஆண்டு 23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி படம் வெளியிடப்பட்டது.

அதற்கான 12 சதவிகித ஜி.எஸ்.டி தொகையை லைகா பட நிறுவனம் செலுத்தாததால், அபராரத தொகையுடன் சேர்த்து 4 கோடியே 88 லட்சம் ரூபாயை நான் செலுத்தியுள்ளேன்.

என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய லைகா நிறுவனம், பல இடங்களில் கடன் பெற்று 500 கோடி ரூபாய் செலவில் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் `இந்தியன் 2′ படத்தை தயாரித்து வருகிறது. இந்த படம் சரியாக ஓடவில்லை என்றால், கடுமையான நிதி நெருக்கடியை லைகா நிறுவனம் சந்திக்க நேரிடும். அப்படி நடந்தால், எனக்கு கிடைக்க வேண்டிய தொகை கிடைக்காமல் போய்விடும் என பயப்படுகிறேன்.

லைகா புரோடெக்ஷன்ஸ்

லைகா புரோடெக்ஷன்ஸ்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *