Tamil Nadu CM Stalin: State’s education system is a model for social justice | பிரதமர் மோடி முன்பு முதலமைசர் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன? அந்த பாயிண்டு முக்கியம்

354304 Mkstalinmodi.jpg

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் மாணவர்களிடையே உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது என பெருமையுடன் குறிப்பிட்டார். ” இந்தியாவிலேயே கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. கல்வியில் சிறந்த என எந்த பட்டியலை எடுத்தாலும் தமிழ்நாட்டின் கல்வி நிறுனங்களின் பெயர்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். இதற்கான விதை 100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் போடப்பட்டது. அதனால் தான் தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலாக இப்போது இருக்கிறது. 

மேலும் படிக்க | திருச்சி வந்த பிரதமர் மோடி.. உற்சாகமாக வரவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்..!

கல்வியில் தமிழ்நாடு சமூகநீதி புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னார்தான் படிக்க வேண்டும் என்ற நிலையை தமிழ்நாடு மாற்றி, அனைவருக்கும் அனைத்துவிதமான வாய்ப்புகளையும் உருவாக்கி தருகிறோம். திராவிட மடல் ஆட்சி அனைவருக்கும் கல்வி என்று சமூகப் புரட்சியை ஏற்படுத்தி அனைவரும் கல்வி பயில வேண்டும் என்று நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

குறிப்பாக எனது கனவு திட்டமான நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் கல்வியை மேம்படுத்துவதற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகும் வகையில் மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மூலம் மாணவர்கள் பெருமளவில் பயனடைந்து வருகிறார்கள். 

29 லட்சம் மாணவ மாணவிகள், 32 ஆயிரம் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. 7.5 இட ஒதுக்கீடு மூலம் மாணவ மாணவிகளுக்கு உயர்கல்விகள் வழங்கப்பட்டு வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக உள்ளது.  கடந்த ஒரு வருடத்தில் 1.40 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்திய அளவில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கலை அறிவியல், பொறியியல், மருத்துவம் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சிறந்து விளங்கி கொண்டிருக்கிறது. 

மாணவ மாணவிகள் நன்றாக படித்து, நம் நாட்டின் எதிர்காலத்தில் தொழில் முனைவராகவும், சமுதாயத்திற்கும் பெற்றோர்களுக்கும் நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும். குறிப்பாக சிறந்த மனிதர்களாக உயர வேண்டும். கல்வியை கற்பித்த ஆசிரியர்களுக்கும் பல்கலைக்கழகளுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி கல்லூரி கல்வி ஆராய்ச்சி கல்வி கிடைப்பதை உறுதி செய்வதே திராவிட மாடல் ஆட்சியாகும். மாணவ மாணவிகள் உயர்கல்வியில் மட்டுமல்ல இந்த சமுதாயத்திலும் சிறந்து உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும். அதே சமயம் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுகிறேன்” என்றார்.

மேலும் படிக்க | டெல்லியில் இருந்து யாரெல்லாம் வந்திருக்கீங்க? மாணவர்களிடம் கேட்ட மோடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *