வைரமுத்து: “உங்கள் தமிழில் கலைஞருக்கு ஒரு கவிதை வரலாறு வர வேண்டும்!” – முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை | Cm stalin speech in vairamuthu book release event

Sta.jpg

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “கவிஞர் வைரமுத்து தொடர்ந்து புத்தகங்களை எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். அதனை நான் தொடர்ந்து வெளியிட்டு கொண்டே இருக்க வேண்டும். படைப்பு, புத்தகத்தை தரமாக தயாரிப்பதில் வைரமுத்து கண்ணும்கருத்துமாக இருப்பார். மிக முக்கியமான காலகட்டத்தில் வைரமுத்து அவர்கள் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

மழை பற்றி அவர் சொல்லும் கவிதையில், திரவ ஊசியால் பூமியின் துவாரம் போலும் துளைத்த மழை என்கிறார். இதைத்தான் நாம் சில வாரங்களுக்கு முன் பார்த்தோம். சென்னையாக இருந்தாலும், நெல்லையாக இருந்தாலும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அதி கனமழை பெய்யும் என்று சொன்னார்களே தவிர எவ்வளவு பெய்யும் என்று சொல்லவில்லை. ஏரி உடைந்து கொட்டியது போல் வானம் உடைந்து கொட்டி மழை பெய்துள்ளது. நூறு ஆண்டில், பெரிய மழை என்று சொல்கிறோமே தவிர இதற்கான காரணங்களை சொல்லவில்லை. ஆனால் உண்மையான காரணங்களை இந்த நூலில் வைரமுத்து சொல்லிவிட்டார்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *