நம்புனா நம்புங்க.. சென்னையில் தக்காளியை விட பெட்ரோல் டீசல் விலை குறைவுதாங்க! குவார்ட்டரும்தான்! | Do you know one kg of full chicken price is less than 1kg tomato price?

Newproject 2023 07 18t132525 473 1689666983.jpg

Chennai

oi-Vishnupriya R

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை பீர் பாட்டிலை விட அதிகமாக விற்பனை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தக்காளி, சின்ன வெங்காயம் , பச்சை மிளகாய், இஞ்சியின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் மட்டுமல்லாமல் சில பணக்காரர்களும் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Do you know one kg of full chicken price is less than 1kg tomato price?

இதற்கு காரணம் வடமாநிலங்களில் தக்காளி விளைச்சல் குறைவாக இருப்பதால் மற்ற மாநிலங்களுக்கு வரத்தும் குறைவாகவே இருக்கிறது. இதனால் விலை உயர்ந்துவிட்டது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன. ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ 60 முதல் 80 க்கு விற்பனை செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மறுபடியுமா.. மீண்டும் உயர்ந்த தக்காளி விலை! சென்னை கோயம்பேடு சந்தை காய்கறிகளின் விலை பட்டியல் இதோ மறுபடியுமா.. மீண்டும் உயர்ந்த தக்காளி விலை! சென்னை கோயம்பேடு சந்தை காய்கறிகளின் விலை பட்டியல் இதோ

அந்த வகையில் ரேஷன் கடைகளுக்கு சென்றாலும் அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்தாலும் தக்காளி கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள். கூட்டத்தை பொருத்து ஒருவருக்கு ஒரு கிலோ, அரை கிலோ என தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் தக்காளியின் கோயம்பேட்டில் ரூ 5 உயர்ந்து கிலோவுக்கு ரூ 125 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றெல்லாம் ரூ 100 முதல் 120 வரை பல இடங்களில் விற்பனையான நிலையில் இன்று தக்காளி ரூ 125 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியை விற்பனை செய்தே சில விவசாயிகல் கோடீஸ்வரனாகவும் லட்சாதிபதியாகவும் ஆகிறார்கள் என செய்தியை படிக்கிறோம். ஆனால் இந்த நிலை எல்லாம் அவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறையோ ரெண்டு முறையோதான்.

Do you know one kg of full chicken price is less than 1kg tomato price?

மற்ற நாட்களில் கிலோ ரூ 5க்கு கூட தக்காளியை விற்பனை செய்துள்ளார்கள் விவசாயிகள். இந்த விலை தக்காளியை பறிப்பதற்கு கூலி கொடுப்பதற்குக் கூட போதவில்லை என எத்தனையோ விவசாயிகள் கண்ணீர் விட்டுள்ளனர். ஆனால் அப்போதெல்லாம் யாரும் தக்காளியின் விலை குறைவு பற்றி பேசியதில்லை. விவசாயிகளுக்காக கவலைக் கொண்டதும் இல்லை.

ஆனால் இன்று அவர்கள் பணக்காரர்கள் ஆகிறார்கள் என்ற செய்தி மட்டும் பெரிதாக பார்க்கப்படுகிறது. நடவு, உரம், கூலி உள்ளிட்டவைகளுக்கு முதல் வைத்த காசு கூட அறுவடையில் கிடைக்காமல் கடன் கழுத்தை நெரித்ததால் எத்தனையோ விவசாயிகள் தங்கள் இன்னுயிரை விட்டுள்ளார்கள். இப்படிப்பட்ட சூழலில் கூட சென்னையில் தக்காளியின் விலை எதையெல்லாம்விட அதிகம் என்பது குறித்த ஒப்பீட்டை நெட்டிசன்கள் செய்து வருகிறார்கள்.

Do you know one kg of full chicken price is less than 1kg tomato price?

அந்த வகையில் சென்னையில் ஒரு கிலோ தக்காளியை விட ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ 102.63க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசலின் விலை ஒரு லிட்டருக்குரூ 94.24 க்கு சென்னையில் விற்பனையாகிறது.

  • அது போல் ஒரு டின் பீரின் விலை ரூ 80 முதல் 110 வரை டாஸ்மாக்குளில் விற்பனையாகிறது.
  • 180 மில்லி வோட்காவின் விலை வெறும் 120 ரூபாய்தான்.
  • 180 மில்லி ஒயினின் விலை ரூ 110க்கு விற்பனையாகிறது.
  • 180 மில்லி ரம்மின் விலைகூட ரூ 120 க்கு விற்பனையாகிறது.
  • இத்தனை ஏன் ஒரு கிலோ சிக்கன் பிரியாணியின் விலை ரூ 90 முதல் 110 வரை விற்பனையாகிறது
  • ஒரு பிளேட் போன்லெஸ் சிக்கனின் விலையும் ரூ 120 ஆகும்.
  • சிங்கிள் திரை கொண்ட தியேட்டர்களில் ஒரு சினிமா படத்தின் டிக்கெட் விலை ரூ 100 முதல் 120 க்கு விற்பனையாகிறது.
  • சென்னை டூ வேலூர் செல்ல அரசு பேருந்துகளில் ரூ 120
  • கட்டணமாக வசூலிக்கப்படுகிறது
  • முழு கோழியின் விலை ஒரு கிலோவுக்கு 105 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
  • ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ77.70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • ஹோட்டலில் மதிய உணவின் விலை ரூ 90 முதல் 120 வரை விற்பனையாகிறது
  • அது போல் காலை மற்றும் இரவு டிபன்களில் ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ 120 இருந்தால் நன்றாக சாப்பிடலாம்.
  • அரை கிலோ துவரம் பருப்பின் விலை ரூ 80 வரை விற்பனையாகிறது. (தக்காளி விலை குறையும் வரை பருப்பு சாதம், புளி ரசம் சாப்பிடலாமே)
  • அரை கிலோ புளியின் விலை ரூ 92 வரை விற்பனையாகிறது.
  • ஒரு நாளைக்கு பிரபல பிராட்பேண்டின் டேட்டா ரீசார்ஜ் விலை ரூ 49 க்கு கிடைக்கிறது. 6 ஜிபி டேட்டா உள்ளது.

இப்படி பல பொருட்கள் ஒரு கிலோ தக்காளி விலையை காட்டிலும் குறைவாகவே விற்பனை செய்யப்படுகிறது.

English summary

Do you know more items which are selling less than the price of 1 kg of tomato?

Story first published: Tuesday, July 18, 2023, 13:28 [IST]

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *