யூடியூபர் வீட்டில் ஐ.டி ரெய்டு; கட்டுக் கட்காகச் சிக்கிய பணம் – என்ன நடந்தது?|Income Tax Officials Raid At youtuber Home in Uttar Pradesh

Indian Money 100.jpg

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தஸ்லிம் என்பவர் ‘டிரேடிங் ஹப் 3.0’ (Trading Hub 3.0′) என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலில் ஷேர் மார்க்கெட் தொடர்பான தகவல்களை வீடியோக்களாக தயாரித்து பதிவேற்றி வருகிறார். இந்த நிலையில், தஸ்லிம் பல ஆண்டுகளாக யூடியூப் சேனலை நடத்தி, கிட்டத்தட்ட ரூ.1 கோடி சம்பாதித்ததாக கூறப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதித்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அவரின் குடும்பத்தினர் இதை மறுத்திருக்கின்றனர். மேலும் இது தொடர்பான தகவல் வருமான வரித்துறைக்கும் சென்றிருக்கிறது.

அதைத் தொடர்ந்து, தஸ்லிம் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூ.24 லட்சம் ரொக்கம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்த புகாருக்குப் பின்னனில் சதி இருப்பதாக தஸ்லிமின் சகோதரர் பிரோஸ் தெரிவித்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய சகோதரன் மார்கெட்டிங் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டுவருகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *