தலைநிமிறும் தமிழ்நாடு.. மகாராஷ்டிரா,குஜராத்தை தட்டிதூக்கிருச்சே! ஏற்றுமதியில் இந்தியாவிலேயே நம்பர் 1 | Tamil Nadu has topped the list of states that have exported the most

Tamilandu 1689614637.jpg

Chennai

oi-Noorul Ahamed Jahaber Ali

Google Oneindia Tamil News

சென்னை: அதிகளவில் ஏற்றுமதி செய்த இந்திய மாநிலங்களின் தரவரிசை பட்டியலில் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடத்தை பிடித்து இருக்கிறது.

ஒரு நாடு, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது ஏற்றுமதிதான். அம்மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும், அவை ஏற்றுமதி செய்யப்படும் அளவை பொறுத்தே மாநிலத்தின் பொருளாதாரம் வளர்கிறது. இந்தியளவில் தமிழ்நாடில் இதில் முதல் 5 இடங்களில் இருந்து வந்தது.

Tamil Nadu has topped the list of states that have exported the most

மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா போன்ற அரபிக் கடலை ஒட்டி மாநிலங்களிலே இதில் முதல் மூன்று இடங்களை தொடர்ந்து பிடித்து வந்தன. வங்கடலை ஒட்டிய மாநிலங்கள், சாலை மார்க்கமாக ஏற்றுமதி செய்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டுமே இருந்து வந்தது. இந்த நிலையில் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு ஏற்றுமதியில் முதலிடம் பிடித்து உள்ளது.

நிதி ஆயோக் வெளியிட்ட 2022 ஆம் ஆண்டில் அதிகளவில் ஏற்றுமதி செய்த மாநிலங்களின் தரவரிசையில் கடல் மார்க்கமாக ஏற்றுமதி செய்து 80.98 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்து உள்ளது. இந்தியாவின் பொருளாதார தலைநகர் என்று கூறப்படும் மகாராஷ்டிரா இதில் தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக 78.20 புள்ளிகளுடன் 2 வது இடத்தை பிடித்து உள்ளது.

மூன்றாவது இடத்திலும் 76.30 புள்ளிகளுடன் தென் மாநிலமான கர்நாடகா உள்ளது. உற்பத்தியில் சிறந்த மாநிலம் என்று கூறப்படும் குஜராத் கடந்த 2022 ஆண்டில் 73.22 புள்ளிகளுடன் 4 வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. அடுத்த இடத்தில் வடமாநிலமான அரியானா சாலை மார்க்கமாக ஏற்றுமதி செய்து 63.65 புள்ளிகளை பெற்று உள்ளது.

மற்றொரு தென் மாநிலமான தெலுங்கானா சாலை வழியாக ஏற்றுமதி செய்து 61.36 புள்ளிகளை பெற்று 6 வது இடத்திலும், உத்தரப்பிரதேசத்தில் சாலை வழியாக ஏற்றுமதி செய்ததில் 61.23 புள்ளிகளுடன் 7 வது இடத்தை பிடித்து உள்ளது. ஆந்திர பிரதேசம் கடல் மார்க்கமாக ஏற்றுமதி செய்து 59.27 புள்ளிகளுடன் 8 வது இடத்தை பிடித்து இருக்கிறது.

அடுத்த ரவுண்டை வெற்றிகரமாக முடித்த சந்திரயான் - 3.. இஸ்ரோ சொன்ன குட் நியூஸ்! அடுத்த ரவுண்டை வெற்றிகரமாக முடித்த சந்திரயான் – 3.. இஸ்ரோ சொன்ன குட் நியூஸ்!

உத்தராகண்ட் இமயமலை மார்க்கமாக ஏற்றுமதி செய்து 59.13 புள்ளிகளுடன் 9 வது இடத்திலும், பஞ்சாப் 58.95 புள்ளிகளுடன் சாலை மார்க்கமாக ஏற்றுமதி செய்து 10 வது இடத்தையும் பிடித்து இருக்கிறது. ஒடிசா கடல் மார்க்கமாக ஏற்றுமதி செய்து 58.84 புள்ளிகளுடன் 11 வது இடத்தை பிடித்து உள்ளது. அதேபோல் மத்திய பிரதேசம் சாலை மார்க்கமாக ஏற்றுமதி செய்து 55.68 புள்ளிகளுடன் 12 வது இடத்தை பிடித்து உள்ளது.

English summary

Tamil Nadu has topped the list of Indian states that have exported the most, leaving behind Maharashtra and Gujarat.

Story first published: Monday, July 17, 2023, 22:54 [IST]

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *