Officials Demolish Encroachments on Highway, Despite Old Woman’s Plea | ’காலில் கூட விழுகிறேன் மாட்டு கொட்டகையை விடுங்கள்’ மூதாட்டி குரலுக்கு செவிசாய்க்காத அதிகாரிகள்

304598 Velur.jpg

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே கந்தனேரி பகுதியில்  நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தினை சில தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களை கட்டி இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவர் வழக்கு தொடுத்தார். இதனையடுத்து கடந்த 6 மாதத்திற்க்கு முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்துறை சார்பில் நேட்டீஸ் கொடுக்கப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்து இருந்தனர் 

மேலும் படிக்க | மணிப்பூரில் சட்ட ஒழுங்கை காப்பாற்றிவிட்டு, தமிழகம் குறித்து பேசுங்கள் – ஆ. ராசா

ஆனால் 6 மாதம் கடந்தும் குடியிருப்புகளை காலி செய்யாமல் சிலர் இருந்துள்ளனர்.  இதனால் இன்று நேரில் சென்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி எந்திரத்தின் மூலம் அகற்ற முடிவு செய்து அவற்றை அகற்றினர். அப்போது குடியிருப்பு வாசிகள் சிலர் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில்  ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது சிலர் தீ குளிப்பதாக கூறியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரையும் வழுகட்டாயமாக போலீஸ் வேனில் ஏற்றி பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்பு அதிகாரிகள் முன்னிலையில் போலீசார் பாதுகாப்போடு அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டது. அப்போது ஒரு மூதாட்டி எனது மாட்டு கொட்டைகையாவது விட்டு விடுங்கள். எங்களுக்கு 5 மாடு இருக்கு. அதனை எங்கு கொண்டு செல்வேன் உங்கள் காலில் கூட விழுகின்றேன் என கெஞ்சி கேட்டார். அதிகாரிகளை கை எடுத்து கும்பிட்டும் அழுதார்.  ஆனால் சற்றும் மனம் தளராத அதிகாரிகள் அவரை துரத்திவிட்டு ஆக்கிரமிப்பை அகற்றி சென்றனர்.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | எடப்பாடியார் சாதனை படைத்தார்! முக ஸ்டாலின் என்ன செய்தார்? ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *