நூலக திறப்பு விழா: மாணவர்கள் படிக்க கலைஞர் செய்தது என்ன? சாதனைகளை லிஸ்ட் போட்டு மு.க ஸ்டாலின் பேச்சு | What did the Karunaidhi do to study the students? TN CM M.K. Stalin, listing the achievements

Stain7 1689430667.jpg

Madurai

oi-Mani Singh S

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு இருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது பேசிய ஸ்டாலின், மாணவர்கள் படிக்க கலைஞர் கருணாநிதி செய்த சாதனைகள் என்னென்ன என்பதை லிஸ்ட் போட்டு பேசினார்.

மதுரையில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பெயரில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, மதுரையில் ரூ.206 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தில் நூலகம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. மின்னல் வேகத்தில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் முழுவதும் நிறைவடைந்தது.

What did the Karunaidhi do to study the students? TN CM M.K. Stalin, listing the achievements

இதை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நூலகம் என இதற்கு பெயர் வைக்கப்பட்டு முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 17 ஆம் தேதி இந்த நூலகம் திறந்து வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்க இன்று மதுரை வந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மாலை 5 மணியளவில் புதிய நூலகத்தை திறந்து வைத்தார்.

அவருடன் அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு, அமைச்சர்கள், எவ வேலு, பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும் நூலக திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தொடர்ந்து மதுரையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு இருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:-

தலைநகரில், தமிழ்நாட்டில் தலைமகன் அண்ணாவின் நூற்றாண்டில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கருணாநிதி அமைத்து தந்தார். இன்று கலைஞருக்கு அவரது நூற்றாண்டில் கலைநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நான் அமைத்து இருக்கிறேன். புகுமுகு வகுப்பு வரை இலவச கல்வி என்று முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித்த பிறகுதான் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் பள்ளியை நோக்கி வந்தார்கள். இதை அறிந்த காமராஜர், எனக்கு மகிழ்ச்சியாக இருக்கு… இதை கருணாநியிடம் போய் சொல்லுங்க என்று சொல்லி அனுப்பினார்.

அந்த பெருந்தலைவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது கருணாநிதிதான். அந்த நாளில் தான் இந்த நூலகத்தை இன்றைக்கு நாம் திறந்து வைத்திருக்கிறோம். தொடக்க பள்ளிகள், உயர் பள்ளிகளை அதிகப்படுத்தினார் கருணாநிதி. பாடப்புத்தகங்களை இலவசமாக வழங்கினார். கிராமப்புற மாணவர்களுக்கும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும் சலுகைகளை கொடுத்தார். அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கினார். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்.

அறிவு தீ பரவ போகிறது.. கல்வியில் தமிழகம் சிறக்க கருணாநிதியே காரணம்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவு தீ பரவ போகிறது.. கல்வியில் தமிழகம் சிறக்க கருணாநிதியே காரணம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

கணிணி பாடத்தை அறிமுகம் செய்தார். திமுகவின் முதல் ஆட்சி காலத்திலேயே தமிழ்நாட்டில் ஏராளமான அரசு கல்லூரிகள் உருவாக்கப்பட்டது. 1947 முதல் 1967 வரையிலான 20 ஆண்டு காலத்தில் திறக்கப்பட்ட மொத்த கல்லூரிகளின் எண்ணிக்கை 68 தான். ஆனால், கலைஞர் முதல்வராக இருந்த 1969 முதல் 1975 வரையிலான கால கட்டத்தில் 97 அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

English summary

Chief Minister Stalin today inaugurated the grand Artisan Centenary Library in Madurai. Speaking then, Stalin listed the achievements of kalaignar Karunanidhi for the students to read.

Story first published: Saturday, July 15, 2023, 19:49 [IST]

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *