நெட்டிசன்கள் கேள்வி.. ஷிவ் நாடாரை அழைத்தது ஏன்? ஸ்டாலின் பதில் – ரோஷினி பெரியார் கனவின் அடையாளமாம் | MK Stalin explained that why Shiv nadar is invited for Kalaignar library inaguration?

Home 1689430148.jpg

Madurai

oi-Noorul Ahamed Jahaber Ali

Google Oneindia Tamil News

மதுரை: கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் திறப்பு விழாவிற்கு எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் அவரது மகள் ரோஷினியை அழைத்து வந்ததற்கான காரணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கி இருக்கிறார்.

மதுரை புதுநத்தம் சாலையில், 2 லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுர அடி பரப்பளவில்ல் மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்து இருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மதுரையில் நூலகம் கட்டப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தார்.

MK Stalin explained that why Shiv nadar is invited for Kalaignar library inaguration?

அதை தொடர்ந்து ஒரே ஆண்டில் இந்த நூலகம் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது. 8 தளங்களை கொண்ட இந்த நூலகம் மொத்தமாக 215 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நூலகத்தில் ஒரே இடத்தில் சுமார் 3.30 லட்சம் புத்தகங்கள் உள்ளன. இதன் திறப்பு விழா காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டன.

அதற்கான அழைப்பிதழ் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகின. அதில் சிறப்பு அழைப்பாளராக எச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் ரோஷினி நாடார் ஆகியோரது பெயர்கள் இருந்தன. சமூக வலைதளங்களில் இந்த அழைப்பிதழ் புகைப்படத்தை பகிர்ந்து இவர்களை அழைப்பதற்கான காரணம் குறித்து பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

MK Stalin explained that why Shiv nadar is invited for Kalaignar library inaguration?

இந்த நிலையில் இன்று நூலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் முக ஸ்டாலின் சிறப்புரையாற்றியபோது, ஷிவ் நாடார் மற்றும் அவரது மகள் ரோஷினியை இந்த விழாவிற்கு அழைத்ததற்கான காரணத்தை விளக்கி இருக்கிறார். அவர் பேசுகையில், “மதிப்பிற்குரிய திரு ஷிவ் நாடார் அவர்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து இருக்கிறோம்.

“பில்” இதோ.. மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் எதற்கு எவ்வளவு செலவு? எந்த மாடியில் என்ன பிரிவு? “பில்” இதோ.. மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் எதற்கு எவ்வளவு செலவு? எந்த மாடியில் என்ன பிரிவு?

பொது நிகழ்ச்சிகள் எதிலும் அவர் கலந்துகொள்ள மாட்டார். ஆனால் இவரையும் இவரது மகள் ரோஷினி அவர்களையும் மாணவ மாணவிகளான நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அழைத்து வந்து இருக்கிறேன். மிகப்பெரிய தொழில்நிறுவனம் என்று சொல்வது மட்டுமல்ல அவரது பெருமை.

இந்திய தொழிலதிபர்களிலேயே அதிகமான தொகையை நன்கொடையாக வழங்கக்கூடியவர் என்ற பாராட்டை பெற்று இருப்பவர் அவர். உனக்கு பணம் வரும்போது அதிகபடியான உதவி செய் என்று இவருடைய தாயார் சொன்னாராம். அதற்காகவே அறக்கட்டளை தொடங்கியவர் இவர்.

MK Stalin explained that why Shiv nadar is invited for Kalaignar library inaguration?

50 நாடுகளில் கிட்டத்தட்ட 2 லட்சம் வேலை செய்யும் எச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவனரான இவரும் உங்களை போலவே அரசு பள்ளிகளில் படித்தவர்தான். பல கிராமங்களை தத்தெடுத்து உதவிகளை செய்துகொண்டு இருக்கிறார். ஒரு கிராமத்திலே பிறந்து மாநகராட்சி பள்ளியிலே படித்து மிகச்சிறிய நிறுவனத்தை சொந்த முயற்சியால் தொடங்கி இன்று இவ்வளவு பெரிய மனிதராக அவர் உயர்ந்து இருக்கிறார்.

இப்படிப்பட்டவரை உங்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தத்தான் அவர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு இருக்கிறார். அவரது மகள் ரோஷினி அவர்கள் அந்த நிறுவனத்தின் இயக்குநராக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்.

பெண்கள் அனைத்து பொறுப்புகளிலும் இறங்கி பணியாற்ற வேண்டும் என்ற தந்தை பெரியாரின் கனவு நிறைவேறும் காட்சியினுடைய அடையாளமாகவும் இவர்கள் இருவரும் கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் உங்கள் அனைவரின் சார்பில் நன்றி.” என்றார்.

English summary

Tamil Nadu Chief Minister M. K. Stalin has explained the reason for bringing HCL founder Shiv Nadar and his daughter Roshini for the Inauguration of Kalaignar Centenary Library

Story first published: Saturday, July 15, 2023, 19:42 [IST]

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *