கிசுகிசு: கறார் வளையத்தில் மதுரைக்காரர்! – எடப்பாடி: டெல்லி அழைப்பின் பின்னணி – சேமிப்பு: 8 வழிகள்

Image 2023 07 15t174026 156.png

கிசுகிசு: கறார் வளையத்தில் மதுரைக்காரர்!

கிசுகிசு

“ஆளுங்கட்சிக் கூட்டணியிலும் இல்லாமல், எதிர்க்கட்சிகளின் அழைப்பிலும் இல்லாமல் தனியாக அல்லாடும் முரசுக் கட்சியின் பெண் தலைவர், காவிக் கட்சியின் டெல்லி புள்ளிகளை சீக்கிரமே சந்தித்துப் பேசவிருக்கிறாராம். ‘இரண்டு சீட்’ என்கிற அளவுக்குப் பேரம் படிந்தால், காவிக் கட்சியின் கூட்டணியில் முரசுக் கட்சி அங்கம் வகிக்க வாய்ப்பிருக்கிறதாம்.”

– இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழில் இடம்பெற்றுள்ள மேலும் சில அரசியல் கிசுகிசு தகவல்கள்…

* மாஜி மில்க் அமைச்சரை கண்டுகொள்ளாத உடன்பிறப்புகள்; நெகிழச் செய்த முதல்வர்!

* கறார் வளையத்தில் மதுரைக்காரர்..!

* ரெய்டோற்சவ அமைச்சர் வாங்கிய கடன்!

* பணிவானவருக்கு வந்த கோபம்!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

“ரூ.15 லட்சம்” – திமுக மீது அண்ணாமலை காட்டம்! 

அண்ணாமலை

மிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, சென்னையில் காமராஜரின் முழு உருவச் சிலைக்கு இன்று மாலை அணிவித்தப் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, “காமராஜரின் 121-வது பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செய்கிறோம். நீதி நேர்மையான, நாணயமான ஆட்சி வரவேண்டும் என பா.ஜ.க-வின் தொண்டர்களும் தலைவர்களும் சபதமேற்றிருக்கிறோம்” என்றார்.

தொடர்ந்து திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அண்ணமலை அளித்த பேட்டியை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்புவிழா சர்ச்சை!  

கலைஞர் நூற்றாண்டு நூலகம்

ங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகருக்கு கூடுதலாக பெருமை சேர்க்கும் வகையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார்.

முன்னதாக நூலக விழாவுக்கு மதுரையை சேர்ந்த இலக்கியவாதிகள், கலைஞர்கள், கல்வியாளர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற புகாரும் எழுந்தது.

இது குறித்து எழுந்த சர்ச்சையை படிக்க இங்கே க்ளிக் செய்க…

சிறுத்தையை பைக்கில் கட்டிச் சென்ற இளைஞர் | வீடியோ

கட்டி எடுத்துச் செல்லப்படும் சிறுத்தை

ர்நாடக மாநிலம், ஹஸ்ஸான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்து.

இவர் தனது தோட்டத்தில் வேலையில் செய்து கொண்டிருந்தபோது அந்தப் பகுதிக்கு சிறுத்தை ஒன்று வந்திருக்கிறது. இதைக் கண்ட முத்து என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்துப்போனார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

குவியும் டொமேட்டோ பேஸ்ட் ஆர்டர்கள்… திணறும் வியாபாரிகள்!

தக்காளி

க்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், பலரும் அதை வாங்கவே தயங்கும் நிலை உள்ளது.

அதே நேரம், காய்கறிக் கடைகளில் இருந்து தக்காளியை வாங்குவதற்கு பதிலாக மக்கள், மளிகைப்பொருள்களை விநியோகிக்கும் ஆன்லைன் தளங்களில் இருந்து டொமேட்டோ ப்யூரி (Tomato Puree), ஃப்ரோஸன் வெஜிடபிள் (Frozen Vegetable) போன்றவற்றை வாங்கி வருகின்றனர்.

இது குறித்து விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

முதல் போட்டியிலேயே சதம்…  சாதித்துக் காட்டிய ஜெய்ஸ்வாலின் கதை!

Yashasvi Jaiswal

யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – இப்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் உச்சரித்துக் கொண்டிருக்கும் பெயர்.

ஐ.பி.எல்லின் போதே தன் அதிரடியால் அனைவருக்கும் அறிமுகம் ஆனாலும் வெஸ்ட் இண்டீஸ் உடனான இந்தச் சதத்தின் மூலம் இந்தியர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் இந்த 21 வயது இளைஞன்.

சாதித்துக் காட்டிய ஜெய்ஸ்வாலின் கதையை படிக்க இங்கே க்ளிக் செய்க…

எடப்பாடிக்கு டெல்லி அழைப்பின் பின்னணி… உறவை ஒட்டவைத்த ‘சிவ’ பிரமுகர்!

எடப்பாடி பழனிசாமி

டப்பாடி தலைமையிலான அ.தி.மு.க-வை பா.ஜ.க-விடமிருந்து கழற்றிவிட்டு, அ.ம.மு.க., பா.ம.க., த.மா.கா., தே.மு.தி.க., பன்னீர், சசிகலா ஆகியோரை பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் நீண்டகாலமாகவே ஈடுபட்டார் மயிலாப்பூர் பிரமுகர்.

ஓராண்டாக, ஒற்றைத் தலைமை விவகாரத்தில் டெல்லி பா.ஜ.க மேலிடம் ஒரு முடிவை எடுக்க முடியாதபடி அணை போட்டுவந்ததும் அவர்தான்.

அதை உடைப்பதற்காக, சமீபத்தில் களமிறங்கினார் எடப்பாடியின் உறவினரான ‘சிவ’ பிரமுகர்.

எடப்பாடிக்கு டெல்லி விடுத்த அழைப்பின் பின்னணி குறித்து இன்று வெளியான ஜூனியர் விகடன் கவர் ஸ்டோரியில் இடம் பெற்றிருக்கும் விரிவான தகவல்களை படிக்க இங்கே க்ளிக் செய்க…

பணத்தைச் சேமிக்க 8 வழிகள்…

சேமிப்பு

ம்மில் பெரும்பாலானோர், “பணத்தைச் சேமிக்க முடிய வில்லையே, முதலீடு செய்ய பணம் இல்லையே…” என்று புலம்புவதைப் பார்க்க முடிகிறது.

தங்களை மனரீதியாக, செயல்ரீதியாக சிறிது மாற்றிக்கொண்டால் இவர்கள் நிச்சயம் அதிகமான அளவில் பணத்தை சேமிக்க முடியும்.

இன்று வெளியான நாணயம் விகடன் இதழில் அதற்கான 8 வழிகளை சொல்கிறார் நிதி ஆலோசகர் சிவகாசி மணிகண்டன்…

படிக்க இங்கே க்ளிக் செய்க…

குழந்தைகளுக்கு டீ, காபி கொடுப்பது ஆபத்தானதா..?

காபி

ஒவ்வொரு நாள் காலைப் பொழுதும் டீ அல்லது காபியுடன்தான் ஆரம்பமாகிறது. இந்தப் பழக்கத்தைக் குழந்தைகளும் கடைப்பிடிக்கின்றனர்.

இந்த நிலையில், கஃபைன் உணவுகள் அல்லது பானங்களை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா கூடாதா என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வு சொல்வது என்ன..?

தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…

“பெண்ணாகப் பிறந்ததால் அப்பா வந்து பார்க்கவேயில்லை!”- குஷ்பு

Khushbu | குஷ்பு

‘தர்மத்தின் தலைவன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாகக் கால்பதித்து வெற்றிக் கொடியை நாட்டியவர் நடிகை குஷ்பு.

ஆனந்த விகடன் யூடியூப் தளத்தின் ‘கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா’ நிகழ்ச்சியில் நடிகை மற்றும் அரசியல் தலைவரான குஷ்பு பேட்டியளித்திருக்கிறார்.

அவரது வாழ்வில் அவர் கடந்த வந்த அனுபவங்கள் குறித்து அவர் அளித்த இந்தப் பேட்டியை படிக்க இங்கே க்ளிக் செய்க…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *