கலைஞர் நூற்றாண்டு நூலகம்.. ரூ.206 கோடியில் 8 தளங்களுடன் பிரம்மாண்டம்.. முதல்வர் ஸ்டாலின் திறப்பு | CM Stalin inaugurates Kalaingar Centenary Library today

Screenshot512 1689421670.jpg

Madurai

oi-Vishnupriya R

Google Oneindia Tamil News

மதுரை: ரூ.206 கோடி மதிப்பில் மதுரையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நூலகத்தின் முன்பாக நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

காமராஜர் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் உலகிலேயே பெரிய நூலகங்களுடன் போட்டி போடும் அளவுக்கு மதுரையில் கலைஞர் பெயரில் ஒரு நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகம் ரூ.206 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் கட்டப்பட்டது.

CM Stalin inaugurates Kalaingar Centenary Library today

மதுரையில் இன்று மாலை 5 மணிக்கு விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்க முதல்வர் பகல் 11.30 மணிக்கு விமானத்தில் மதுரைக்கு புறப்பட்டார்.
மதுரை விமான நிலையத்திற்கு வந்த அவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் அவர் ஓய்வெடுத்தார்.

மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மதுரையில் உலகத்தரம் வாய்ந்த நிறுவனமான பின்னக்கிள் இன்ஃபோடெக் சொல்யூசன்ஸ் நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்

மாலை 5 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நூலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். அதன்பின் போலீஸ் ரிசர்வ் லைன் மைதானத்தில், கலைஞர் நூலக திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவர் அரசு மருத்துவமனையையும் திறந்து வைக்கிறார்.

ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது! ஸ்டாலினை பாராட்டும் செல்வப்பெருந்தகை! ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது! ஸ்டாலினை பாராட்டும் செல்வப்பெருந்தகை!

முதல்வர் வருகைக்காக மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நத்தம் சாலை- ரவுண்டானா சந்திப்பு- ஆத்திக்குளம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கப்பலூரிலிருந்து மதுரை நோக்கி வரும் கனரக வாகனங்கள் அருப்புக்கோட்டை – தூத்துக்குடி செல்லும் சாலையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் , எ.வ.வேலு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

English summary

Madurai Kalaingar Centenery Library to be inaugurated today by CM Stalin. It costs Rs 206 crore.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *