Uncategorized

ஆர்டிஓ ஆபிஸ்க்கு போக வேண்டாம்.. ஆன்லைனிலேயே இனி இத்தனை சேவைகளா? தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு | Tamil Nadu govt 31 types of services can now be obtained online, including duplicate driver’s license

Mkstaldr 1689412539.jpg

Chennai

oi-Velmurugan P

Google Oneindia Tamil News

சென்னை: நகல் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமத்தில் பெயர் மாற்றம் உள்பட 31 வகையான சேவைகளை இனி ஆன்லைனில் பெறலாம் என தமிழக போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

லைசென்ஸ் எடுப்பதில் தொடங்கி, வாகனத்திற்கு நம்பர் பிளேட் வாங்குவது பல்வேறு வாகனம் தொடர்பான சேவைகளை பெற முன்பெல்லாம் ஆர்டிஓ அலுவலங்களில் கால் கடுக்க காத்திருக்க வேண்டும். கண்டிப்பாக அதற்காக அன்றைக்கு வேலைக்கு போகாமல் லீவும் போட வேண்டியதிருக்கும். ஆனால் இப்போது பல சேவைகளை ஆன்லைனில் வந்துள்ளன. இந்த வசதிகள் பொதுமக்களுக்கு பெரிய பயனுள்ளதாக உள்ளது.

Tamil Nadu govt 31 types of services can now be obtained online, including duplicate drivers license

தமிழ்நாட்டில் மொத்தம் 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் இருக்கின்றன. மேலும் 54 வாகன போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்கள் இருக்கின்றன. இந்த அலுவலகங்கள் எல்லாம் கணிணி மயமாகிவிட்டன. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது சேவைகளை எவ்வித சிரமமும் இன்றி பெற முடிகிறது. இதேநேரம பல சேவைகளுக்கு நேரில் போக வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலை தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது.

தற்போதைய நிலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்ந்த 48 சேவைகளில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம், பழகுநர் உரிமம் பெறுதல் உள்ளிட்ட 6 சேவைகள் முற்றிலுமாக ஆன்லைனில் கொண்டுவரப்பட்டன.

இந்நிலையில் மீதமுள்ள 42 சேவைகளும் இணைய வழியில் கொண்டு வரப்படும் என தமிழக சட்டசபையில் அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். அந்த வகையில், 25 சேவைகள் நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் முழுக்க முழுக்க ஆன்லைனில் கொண்டு வரப்பட்டுள்ளன.

என்னென்ன சேவைகள் புதிதாக கொண்டுவரப்பட்டள்ளன என்பதை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு சென்று அறிய முடியும். இனிமேல் நகல் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமத்தில் பெயர் மாற்றம், பன்னாட்டு ஓட்டுநர் உரிமம், வாகனத்துக்கான தற்காலிக பதிவெண், அனுமதி சீட்டில் (பெர்மிட்) பெயர் மாற்றம், அனுமதி சீட்டை ஒப்படைத்தல் போன்ற 25 சேவைகளை முற்றிலும் இணைய வழியில் மட்டுமே பெற முடியும்.

இதனிடையே மீதமுள்ள 17 சேவைகளையும் இணைய வழியில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருக்க வேண்டும்.விவரங்கள் மாறுபட்டிருந்தால் ஆன்லைனில் இந்த சேவையை பெற முடியாமல் போய்விடும். தற்போது அமலுக்கு வந்துள்ள 31 சேவைகளையும் https://tnsta.gov.in என்ற இணையதளத்தில் பெற முடியும்.

ஓட்டுநர் உரிமம் தொலைந்து போனால் எப்படி பெறுவது: நீங்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை இழந்துவிட்டாலோ அல்லது காணாமல் போனாலோ அது குறித்து காவல்துறையிடம் புகார் செய்ய வேண்டும். காவல்துறையில் புகார்களை ஆன்லைனிலும் https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/LostDocumentReport?0 செய்யலாம். இதில் புகார் அளித்து, போலீஸ் சான்றிதழுடன், விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் https://parivahan.gov.in/parivahan/ என்ற இணையதளத்தில் நகல் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

English summary

Top officials of Tamil Nadu Transport Department said that 31 types of services, including duplicate driver’s license, name change in driver’s license, can now be obtained online. நகல் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமத்தில் பெயர் மாற்றம் உள்பட 31 வகையான சேவைகளை இனி ஆன்லைனில் பெறலாம் என தமிழக போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *