“மனுதாரர் கோரிக்கையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது” – உதயநிதிக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு | high court verdict on Hindu Munnani case against DMK minister udhayanidhi, sekarbabu and MP A Raja

Gridart 20240306 094059044.jpg

தமிழக அரசுத்தரப்பில், எந்த தகுதிஇழப்பும் வராத நிலையில், அமைச்சர்களின் பதவியை பறிக்க கோரும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. மக்கள் பிரதிநிதிகளாக உள்ள அமைச்சர்களுக்கு எதிராக கோ வாரண்டோ வழக்கு தாக்கல் செய்ய முடியாது. தகுதியில்லாத ஒருவர், சட்டவிரோதமாக அமைச்சராக பதவி வகித்தால் தான் கோ வாரண்டோ வழக்கு மூலம் அவரை நீக்கலாம். ஆனால், தகுதிப்படி சட்டப்படி அமைச்சர் பதவி வகிப்பவரை கோ வாரண்டோ மூலம் நீக்க முடியாது என வாதிடப்பட்டது.

ஒன்பது நாள்கள் நடந்த விசாரணைக்குப் பின், கடந்த ஆண்டு நவம்பர் 23 ம் தேதி இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி அனிதா சுமந்த் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதி, அமைச்சர் உதயநிதி, ஆ.ராசா பேசியது தவறு என்றாலும், மனுதாரர் கேட்கும் கோரிக்கையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. அவர்களின் பேச்சுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் தண்டிக்கப்படவில்லை. எனவே கோ வாரண்டோ பிறப்பிக்க முடியாது என அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு, எம்.பி. ஆ.ராசாவுக்கு எதிரான கோ-வாரண்டோ வழக்குகள் முடித்துவைக்கப்பட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *