ராஜ்ய சபா தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த MLA-க்கள்? இமாச்சலில் ஆளும் காங்கிரஸுக்கு அடுத்தடுத்த அடி! | congress and samajwadi MLAs cross voted in rajya sabha election

Whatsapp Image 2024 02 09 At 20 56 45 1 .jpeg

அதையடுத்து தேர்தலும் நடந்து முடிந்தது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க 8 இடங்களையும், சமாஜ்வாதி 2 இடங்களையும் வென்றிருக்கிறது. இதில், ராகேஷ் பாண்டே, அபய் சிங், ராகேஷ் பிரதாப் சிங், மனோஜ் பாண்டே, வினோத் சதுர்வேதி, பூஜா பால், அசுதோஷ் மவுரியா ஆகிய சமாஜ்வாதி எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களித்ததாகக் கூறப்படுகிறது.

கர்நாடகாவில், 3 இடங்களில் காங்கிரஸும், ஒரு இடத்தில் பா.ஜ.க-வும் வெற்றிபெற்றிருக்கிறது. இவ்வாறு, ராஜ்ய சபா தேர்தல் முடிந்த நிலையில், இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸுக்கு மேலும் அதிர்ச்சியாக மாநில அமைச்சர் விக்ரமாதித்ய சிங் இன்று தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

விக்ரமாதித்ய சிங்

விக்ரமாதித்ய சிங்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விக்ரமாதித்ய சிங், “தற்போதைய சூழலில் அரசின் அங்கமாக நான் நீடிப்பது சரியல்ல என்பதை மட்டுமே இப்போது கூற விரும்புகிறேன். எனவே, அமைச்சர்கள் குழுவிலிருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். இனி வரும் காலங்களில், என் மக்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி, அதன் பிறகு எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன்” என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *