india presidential system if modi wins 2024 parliamentary elections a raja warning | மோடி வெற்றி பெற்றால் அதிபர் ஆட்சி முறைக்கு இந்தியா மாறும் – ஆ.ராசா எச்சரிக்கை

362521 Araja.jpg

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டன. பாஜக, மற்ற எஞ்சியிருக்கும் கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. இருப்பினும் கடைசி நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் இணையவும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் பாஜக, கூட்டணி விஷயத்தில் அமைதியாக இருக்கிறது. 

திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கும் அதேநேரத்தில் தொகுதிவாரியாக நிர்வாகிகளைளயும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சேலம், திருச்சி, எடப்பாடி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து குறைகளை கேட்டுக் கொண்டிருப்பதுடன், புதிய வேட்பாளரை நிறுத்தினால் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்த ஆலோசனையையும், கட்சிக்குள் இருக்கும் அதிருப்தியை களைய நடவடிக்கையும் எடுத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டிருந்தாலும் மற்ற தொகுதிகளில் இளைஞர்களை அதிகம் இம்முறை களமிறக்க திமுக திட்டமிட்டிருக்கிறது. அதன்படி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து அது குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க | ரஜினிகாந்த், கமல், விஜய்யிடம் ஆதரவு கேட்போம்-வானதி சீனிவாசன் பேட்டி!

அண்மையில் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள், அத்தொகுதியில் மீண்டும் ஆ.ராசாவை களமிறக்குமாறு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டனர். அதற்கேற்ப ஆ.ராசாவும் நாடாளுமன்ற தொகுதி வேலைகளை நீலகிரியில் தொடங்கிவிட்டார்.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், பெள்ளேபாளையம் ஊராட்சியில் ரூபாய் 80 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகள் துவக்க விழா சிறுமுகை பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பங்கேற்றார். 

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் ஏற்பட்ட கடுமையான மழை பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் ரூபாய் 22 ஆயிரம் கோடி கேட்டோம். ஆனால் மத்திய அரசு வழங்கியது வெறும் 500 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில ஆரசு மீது வெறுப்பு ஏற்பட வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகிறது மத்திய அரசு. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடி வெற்றி பெற்றால் இந்திய அரசியல் சாசனம் இருக்காது. உச்ச நீதிமன்றம் இருக்காது. நாடாளுமன்ற சட்டமன்றங்களுக்கு வேலை இருக்காது. அதிபர் ஆட்சி முறையே நடைபெறும். இதனை நினைவில் வைத்து மதவெறியை தூண்டி ஆதாயமடைய நினைக்கும் பா.ஜ.க விற்கு தோற்கடிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க | Bihar Politics: பீகாரில் ஒன்பதாவது முறையாக நிதீஷ் குமார் பதவியேற்பு…!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *