ஐ.ஆர்.எஸ் அதிகாரி பாலமுருகன் சஸ்பெண்ட்; சர்ச்சையும், காரணமும்! | why irs officer balamurugan suspended

Vikatan 2020 09 9668d5ea 14bd 4917 B422 142bdf41294c Balamurugan.avif .png

ஏற்கெனவே, கடந்த 2014, 2016 ஆண்டுகளில் விருப்ப ஓய்வில் செல்வதற்காக ராஜினாமா கடிதம் கொடுத்திருந்திருக்கிறார் பாலமுருகன். ஆனால், மத்திய அரசு அனுமதிக்கவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்பாகக்கூட, மீண்டும் ராஜினாமா கடிதத்தை அளித்திருக்கிறார். அப்போதும் அனுமதி கிடைக்கவில்லை. இந்தச் சூழலில்தான், பணி ஓய்வுக்கு இரண்டு நாள்கள் முன்னதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார் பாலமுருகன். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்து கடிதம் எழுதியதைத் தொடங்கி, ராமர் கோயில் திறப்பு விழா அன்று அலுவலகத்தில் பணிபுரிந்தது வரை அவருடைய சஸ்பெண்டுக்கான காரணமாக அடுக்குகிறார்கள் ஜி.எஸ்.டி துறையின் சீனியர் அதிகாரிகள்.

பாலமுருகன் எழுதிய கடிதம்

பாலமுருகன் எழுதிய கடிதம்

அதேநேரத்தில், பா.ஜ.க வட்டாரங்களிலும் கொந்தளிப்பு எழுந்திருக்கிறது. “பாலமுருகனின் குடும்பமே காங்கிரஸ் குடும்பம்தான். அவருடைய அப்பா பாலசுப்பிரமணியன் தீவிரமான ராஜீவ் காந்தி ஆதரவாளர். இலங்கை போரின் சமயத்தில் சோனியா காந்திக்கு பாலமுருகன் எழுதிய கடிதத்திலேயே, ‘நாங்கள் ராஜீவ் காந்தியின் ஆதரவாளர்கள். அவர் மறைந்தபோது, 16 நாள்கள் துக்கத்தை என் குடும்பமே அனுசரித்தது. அவர் கொல்லப்பட்டதற்கு ஒரு தமிழனாக எனக்கு ஒரு குற்றவுணர்ச்சி உண்டு. இப்போது, இலங்கையில் நடைபெறும் போரால் பல்லாயிரக்கணக்கானோர் இறந்திருக்கும் சூழலில், ஒரு இந்தியனாக குற்ற உணர்ச்சி ஏற்பட்டுள்ளது’ எனக் கூறியிருக்கிறார். காங்கிரஸ் அனுதாபியாக இருப்பதால்தான், பா.ஜ.க மீது தொடர்ச்சியாக எதிர்ப்புக்குரல் எழுப்பி வருகிறார் பாலமுருகன்” என்கிறார்கள் சூடாக.

பாலமுருகனுக்கு நெருக்கமான அதிகாரிகள் கூறுகையில், “பணியாற்றும் காலத்திலேயேகூட மனசாட்சிக்கு விரோதமாக எதையும் பாலமுருகன் செய்ததில்லை. தன்னுடைய கொள்கையை ஒருகாலும் அவர் விட்டுக்கொடுத்ததில்லை. அதனால்தான், நிர்மலா சீதாராமனுக்கு எதிராக ஜனாதிபதிக்கு கடிதமும் எழுதினார். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது அப்பட்டமான அதிகார அத்துமீறல்தான். பழிவாங்கும் நோக்குடனேயே அதைச் செய்திருக்கிறார்கள். தன்னுடைய சஸ்பெண்ட் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றம் செல்வார் பாலமுருகன்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *