Global Corruption Index 2023: சர்வதேச ஊழல் குறியீடு பட்டியல் வெளியீடு… இந்தியாவின் நிலை என்ன? | article briefing Global Corruption Index 2023

India Flag G66db62006 1280.jpg

நார்வே, சிங்கப்பூர், சுவீடன், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, லக்சம்பர்க் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களைத் தக்கவைத்திருக்கின்றன. அமெரிக்கா 69 மதிப்பெண்கள் பெற்று 24-வது இடத்தையும், 43 மதிப்பெண்கள் பெற்று சீனா 76-வது இடத்தையும் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டில் 85-வது இடத்திலிருந்த இந்தியா, இந்த முறை 39 மதிப்பெண்களுடன் 93-வது இடத்துக்கு இறங்கியிருக்கிறது. அண்டை நாடான பாகிஸ்தான், 29 மதிப்பெண்களுடன் 133-வது இடத்தில் இருக்கிறது.

இந்தப் பட்டியலில் சோமாலியா கடைசி இடத்தில் இருக்கிறது. மேலும், இந்த அறிக்கையில், 180 நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் 50-க்குக் கீழே மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றன.

அயர்லாந்து, தென் கொரியா, மாலத்தீவு, வியட்நாம் உள்ளிட்ட எட்டு நாடுகள் மட்டுமே தங்கள் தரவரிசையை மேம்படுத்தியுள்ளன.

கடந்த ஆண்டு ஐஸ்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன் போன்ற அதிக மதிப்பெண் பெற்ற ஜனநாயக நாடுகள்கூட, இந்த ஆண்டின் தரவரிசைப் பட்டியலில் சரிவைச் சந்தித்திருக்கின்றன. இரான், ரஷ்யா, வெனிசுலா போன்ற அதிக சர்வாதிகார நாடுகளாகக் கருதப்படும் நாடுகளும் அவற்றின் மதிப்பெண்களை இழந்திருக்கின்றன. 23 நாடுகள் உலகளாவிய தரவரிசைக் குறியீட்டில் மிகக் குறைந்த நிலைக்குச் சென்றிருக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *