coimbatore jeweler sues sister in law husband for robbery | கோவை: நகைக்கடை கொள்ளையில் டிவிஸ்ட்… பணம், நகைகளை சுருட்டிய தங்கை கணவர்.!

361513 Covairoberry.jpg

கோவை டாடாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ் என்பவரின் மகன் ஆர். பாலமுருகன் ( 51). இவர் கோவை கிராஸ்கட் ரோடு பகுதியில் கற்பகம் ஆபரண மாளிகை என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி இவரது தந்தை ராமதாஸ் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தார். பிறகு 16 நாட்கள் ஈமக் காரியம் செய்ததால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் கடையை அவர் திறக்கவில்லை. 

இந்தநிலையில் வாடிக்கையாளர் ஒருவருக்கு தாலி செயின் அவசரமாக தேவைப்பட்டதால் பாலமுருகனை தொடர்பு கொண்டார்கள். அப்போது பாலமுருகன் தனது தங்கையின் கணவர் சிவக்குமாரை அழைத்து, வாடிக்கையாளருக்கு அவசரமாக தாலிக்கொடி தேவைப்படுவதால் கடையின் சாவியை கொடுத்து தாலிக் கொடியை மட்டும் எடுத்துக் கொடுக்குமாறு கூறி இருக்கிறார். பாலமுருகனின் தங்கை கணவர் சிவக்குமார் கடையை திறந்து தாலிக் கொடுத்து விட்டு, பிறகு  கடையில் இருந்த ஏராளமான நகைகள், பாலமுருகன் தந்தையின் பெயரில் உள்ள முதலீட்டு பத்திரங்கள், முக்கிய ஆவணங்களை எடுத்துக் கொண்டார். 

மேலும் படிக்க | திமுகவில் இருந்தவர் திருமாவளவன், விசிக கூட்டணி உறுதி – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

மேலும் கடை ஊழியர் சதீஷ், பாலமுருகனின் உறவினர் ஜெய்சங்கர் ஆகிய இருவரும் சிவக்குமாரிடம் பொருட்களை எல்லாம் எடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு சிவக்குமார் நான் தர்மபுரியில் வசிக்கிறேன் என்னிடம் பல ரவுடிகள் உள்ளார்கள். இதை நீங்கள் பாலமுருகனிடம் தெரிவித்தால் உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் கொலை செய்து விடுவேன். மேலும் என்னை பகைத்துக் கொள்ளாதீர்கள் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன சதீஷ் மற்றும் உறவினர் ஜெய்சங்கர் பாலமுருகனிடம் இதனை தெரிவிக்கவில்லை. பிறகு கடை ஊழியரை மிரட்டியது போல் பாலமுருகனையும் அவரது  குடும்பத்தாரையும் மிரட்டியுள்ளார் சிவக்குமார். அப்போது தான் கடை ஊழியரும், ஜெய்சங்கரும் ஏற்கனவே கடையில் நடந்த அனைத்து சம்பவத்தையும் பாலமுருகனிடம் தெரிவித்துள்ளார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகன் தனது தங்கை கணவர் சிவக்குமார் மீது புகார் கொடுக்க முடிவெடுத்துள்ளார். 

ஆனால், கடை ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் சிவக்குமாரை  பகைத்து கொள்ள வேண்டாம் என கூறியதால் புகார் அளிக்காமல் இருந்துள்ளார். இருப்பினும், 
தொடர்ந்து பாலமுருகனுக்கு மிரட்டல் வந்துள்ளது. இதை தொடர்ந்து பாலமுருகன் காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் பாலமுருகனின் தங்கை கணவர் சிவகுமார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து பிரச்சனையாக இருக்கலாம் என்ற சந்தேகமும் இருப்பதால், பாலமுருகன் அளித்த புகாரின் பின்னணியையும் விசாரிக்க தொடங்கியுள்ளது காவல்துறை. 

மேலும் படிக்க | தமிழ்நாடு என்று சொல்வதற்கே சிலருக்கு பிடிக்கவில்லை – அமைச்சர் கீதா ஜீவன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *