`புதின் குறிவைத்த 4 நாடுகள்; நாம் புதினை முடிக்காவிட்டால்..!' – ஜெலன்ஸ்கி எச்சரிக்கை!

Zelensky.jfif .png

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தடுத்து நிறுத்த ஒருங்கிணைந்த முயற்சி எடுக்காதவரை அவரது ஆக்கிரமிப்புப் போர் நிறுத்தப்படாது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று வில்னியஸில் நடந்த செய்தி மாநாட்டில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,

“ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா, மால்டோவா ஆகிய நாடுகளை ஆக்கிரமிக்கும் அடுத்த இலக்குகளாகத் திட்டமிட்டிருக்கிறார்.

ஜெலன்ஸ்கி

உக்ரைன் – ரஷ்யப் போரை நிறுத்துவதற்கு புதினின் விருப்பமின்மையும், போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு நட்பு நாடுகளின் அழுத்தம் இல்லாததுமே காரணம். இந்தப் போர் இன்னும் தொடர்ந்தால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கத் தவறினால், அண்டை நாடுகளும் அதன் ஆபத்தை எதிர்கொள்ளும். எனவே, அண்டை நாடுகள் திட்டமிட்டு புதினை, இந்தப் போரை முடிக்கும் வரை அவர் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரமாட்டார் என்பதை எச்சரிக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த மாநாட்டுக்கு முன்னரே, லிதுவேனியா சென்ற ஜெலன்ஸ்கிக்கு உதவும் வகையில், லிதுவேனியா ஜனாதிபதி கிடானாஸ் நவுசெடா ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் இருதரப்பு பாதுகாப்பு உத்தரவாதங்கள் பற்றிய விவாதங்களையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *