Vijayakanth: “கேப்டனுக்கு மணிமண்டபம்; முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்!” – பிரேமலதா விஜயகாந்த் | DMDK general secretary requests CM Stalin to build manimandapam for vijayakanth

Prema Latha.jpg

தே.மு.தி.க நிறுவனரும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் (டிசம்பர் 28) உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் விஜயகாந்த்தின் உடல் நேற்று (டிசம்பர் 29) தீவுத்திடலில் வைக்கப்பட்டது. பின்னர், இறுதியாக விஜயகாந்த்தின் உடல் தீவுத்திடலிலிருந்து, கோயம்பேட்டிலுள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு, 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Vijayakanth - விஜயகாந்த்

Vijayakanth – விஜயகாந்த்

முதல்வர் ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், விஜயகாந்த்தின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் இறுதியாக அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், அரசியல் தலைவர்கள், காவலர்கள், ஊடகங்கள், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த விஜயகாந்த்தின் மனைவியும், தே.மு.தி.க பொதுச்செயலாளருமான பிரேமலதா, பொது இடத்தில் விஜயகாந்த்துக்குச் சிலை வைக்குமாறும், மணிமண்டபம் கட்டித்தருமாறும் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *