பீகாரில் இரு பிரிவினரிடையே வலுக்கும் மோதல்… இணையதள முடக்கம்! – என்ன நடக்கிறது அங்கே? | Because of the communal clash in Dharbangah district of Bihar there is an internet ban till july 30

Fsrtv77ayaa8ffw.jpg

போலீஸாரும் உள்ளூர் நிர்வாகமும் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுதிருப்பதாக அரசு தரப்பில் தெரிவித்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக பலர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த மோதல் சம்பவத்தையொட்டி, தர்பங்கா மாவட்டத்தில் ஜூலை 30-ம் தேதிவரை இணையதள சேவை தடைசெய்யப்பட்டிருக்கிறது.  

அதே மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒரு மயானம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக, இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்ச்சை நிலவிவந்திருக்கிறது. அந்த விவகாரம், தற்போது மோதலாக மாறியிருக்கிறது.

ஸ்ரீகாந்த் பாஸ்வான் என்பவர் உடல்நலமின்றி இறந்திருக்கிறார். குறிப்பட்ட மயானத்தில் அவரது இறுதிச்சடங்கு நிகழ்ந்தபோது, மல்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் வந்து எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இரு தரப்பிலும் வாக்குவாதம் முற்றி, கற்களால் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதில், சில போலீஸார் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீஸார் தலையிட்ட பிறகு, அங்கு இறுதிச்சடங்கு நடைபெற்று உடல் எரியூட்டப்பட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *