“தலைக்கேறிய போதை..” நடுவானில் தாய்- மைனர் மகளிடம் அத்துமீறிய பயணி! கண்டு கொள்ளாத பணிப்பெண்கள் | Drunken Passenger Sexually Assaults Woman And Her Daughter On Flight

Flight 1690715352.jpg

Delhi

oi-Vigneshkumar

Google Oneindia Tamil News

டெல்லி: சமீப காலங்களாக விமானத்தில் மிக மோசமான சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், அது போலத் தான் இப்போது நெஞ்சை உலுக்கும் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது.

விமானங்களில் பயணிகளுக்கு மது கொடுப்பது குறித்து சமீப காலமாகவே விவாதம் எழுந்துள்ளது. விமானங்களில் மது குடித்துவிட்டு சில பயணிகள் மிகவும் மோசமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இதனால் ஒட்டுமொத்தமாகவே விமானங்களில் மது கொடுப்பதை நிறுத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

 Drunken Passenger Sexually Assaults Woman And Her Daughter On Flight

ஷாக் சம்பவம்: ஒன்பது மணி நேர விமான பயணத்தின் போது அதீத மது குடித்த பயணி ஒருவர், பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் மற்றும் அவரது டீனேஜ் மகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். அமெரிக்காவில் நடந்த இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த சம்பவத்தைத் தடுக்க தவறிய டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் $2 மில்லியன் வழங்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. விமான நிறுவனத்தின் அலட்சியமான நடவடிக்கையே இந்த மோசமான சம்பவத்திற்குக் காரணம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரத்தில் இருந்து கிரீஸின் ஏதென்ஸுக்கு சென்ற இந்த 9 மணி நேரம் விமானத்தில் தான் இந்த கொடூரம் நடந்துள்ளது. விமானப் பணிப்பெண்களிடம் இது குறித்து உதவி கேட்ட போதிலும், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. குடித்துவிட்டு அந்த நபர் மோசமாக நடந்து கொள்ள ஆரம்பித்த பிறகும், தொடர்ந்து மதுவைக் கொடுத்துள்ளனர். சுமார் 9 மணி நேரம் இதனால் தான் கொடூரத்தை எதிர்கொள்ள நேரிட்டதாகவும் வழக்கில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், விமானம் தரையிறங்கிய பிறகும் பாலியல் அத்துமீறல் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், குடிபோதையில் இருந்த அந்த நபரை வெளியேற ஊழியர்கள் அனுமதித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மதுபோதை: அவர் மதுபோதையில் இருந்தது தெரிந்தும்.. டெல்டா விமானப் பணிப்பெண்கள் அவருக்குத் தொடர்ந்து மதுவைக் கொடுத்துள்ளனர். குடிபோதையில் இந்த அந்த பயணிக்குத் தாய் மற்றும் மகளுக்கு அருகில் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த நபர் குடித்துவிட்டு அந்த 16 வயது சிறுமியிடம் பேச முயன்றுள்ளார். இருப்பினும், முதலில் அந்த சிறுமி அவரை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் சிறுமியிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டுள்ளார்.

மேலும், சிறுமியை நோக்கி ஆபாசமான சைகைகளைக் காட்டிய அவர், தொடர்ந்து ஆபாசமாகப் பேசியுள்ளார். அந்த சிறுமியை முறையற்று தொட்டுள்ளார். அப்போது அருகில் இந்த சிறுமியின் தாயார் இதில் தலையிட்டு, தனது மகள் மைனர் என்றும் இதனால் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இருப்பினும், அதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து சிறுமியிடம் அந்த நபர் அத்துமீறியுள்ளார்.

கண்டு கொள்ளாத பணிப்பெண்கள்: இருவரையும் நோக்கி சத்தமாகக் கத்திக் கொண்டிருந்துள்ளார். இதை மற்ற பயணிகளும் கவனித்துள்ளனர். இதனால் அஞ்சிய அந்த தாய், இது குறித்து அங்கிருந்த விமானப் பணிப்பெண்களிடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும், அவர்கள் “பொறுமையாக இருங்கள்” எனச் சொல்லிவிட்டு இதெல்லாம் ஒரு விஷயமா என்பது போலக் கடந்து சென்றுவிட்டனர்.

இதன் பிறகு நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. அந்த நபர் சிறுமியை முறையற்ற வகையில் தொட ஆரம்பித்துள்ளனர். மேலும், முன் சீட்டையும் எட்டி உதைத்துள்ளான். இந்த சம்பவம் எல்லாம் ஜூலை 26, 2022இல் நடந்துள்ளது. மேலும் தாய்- மகளை அவர் தொடர்ந்து ஆபாசமாகத் திட்டியுள்ளார். இதில் அந்த மைனர் சிறுமி ரொம்பவே அஞ்சிவிட்டார். இதனால் அவர் தனது தாயின் மடியில் சாய்ந்து தூங்க முயன்றுள்ளார். அப்போதும் மிக மோசமாகச் சிறுமியிடம் அவர் அத்துமீறியிருக்கிறார். தொடர்ந்து தாயாரிடம் அத்துமீறியுள்ளார்.

கோரிக்கை: அவரது செயல்பாடுகளைப் பொறுக்க முடியாத அந்த தாய்- மகள் ஜோடி தங்கள் இருக்கையை மாற்றத் தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், இந்த கோரிக்கையைக் கூட பணிப்பெண்கள் ஏற்கவில்லையாம். இந்த கொடூரங்களை எல்லாம் பார்த்த அங்கிருந்த சக பயணி ஒருவர் தானாக முன்வந்து இடத்தை மாற்றி அமர்ந்துள்ளார். அதன் பிறகு நிலைமை சற்று அமைதியாகியுள்ளது. பொறுப்பே இல்லாமல் இந்த அந்த குழு விமானம் தரையிறங்கியவுடன், அந்த பெண் அவரது மகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

“எங்கு திரும்பினாலும் குழப்பம்..” திடீரென குவிந்த பயணிகள்.. மும்பை ஏர்போர்ட்டில் விமான சேவை பாதிப்பு

இந்த கொடூரம் குறித்துத் தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விமானத்தில் நடந்தது மிக மோசமான சம்பவம் மட்டுமின்றி.. விமானப் பணிப்பெண்கள் நினைத்திருந்தால் அதை முற்றிலும் தடுத்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

English summary

In Mid Flight Woman and daughter sexually assaulted by drunk man: US man after drinks assaults woman.

Story first published: Sunday, July 30, 2023, 16:39 [IST]

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *