இங்கிலாந்து அரசுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்! சென்னைக்கு அருகே பிரம்மாண்ட தாவரவியல் பூங்கா | Tamil Nadu Government MoU with UK Government! A huge botanical garden near Chennai

Mkpark 1690458770.jpg

Chennai

oi-Arsath Kan

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு அரசு இங்கிலாந்து அரசுடன் இணைந்து, சென்னைக்கு அருகே தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

மேலும், காடுகள், அலையாத்தி காடுகள், ஈரநிலங்களை பாதுகாகாக்கும் திட்டத்தினை தொடங்கி, தொழிற்சாலைகளில் கரிம குறைப்புக்கான பசுமை மதிப்பீட்டு கட்டமைப்பு ஒன்றையும் வெளியிட்டது.

Tamil Nadu Government MoU with UK Government! A huge botanical garden near Chennai

இங்கிலாந்து மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு இடையேயான காலநிலை உத்திகளுக்கான பங்களிப்பில், புதிய மைல்கற்களை எட்டும் வகையில் சென்னையில் நடைபெறும் G20 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர்கள் கூட்டத்தில் இங்கிலாந்து அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் தெரஸ் கோஃபே மற்றும் காலநிலை, எரிசக்தி மற்றும் நிகர உமிழ்வின்மை துறை (Net Zero) அமைச்சர் கிரஹாம் ஸ்டூவர்ட், தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்களுடன் இணைந்து முக்கிய திட்டங்களைத் தொடங்கிவைத்தனர்.

லண்டனில் உள்ள கியூ கார்டன்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப பங்களிப்புடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாவரவியல் பூங்கா ஒன்றை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டின் பூர்வீக அரிய வகை, மற்றும் தாவர இனங்களை பாதுகாப்பதே இப்பூங்காவினை அமைப்பதற்கான நோக்கமாகும். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் இங்கிலாந்து அரசின், சுற்றுச்சூழல், உணவு மற்றும் ஊரக விவகாரங்கள் துறை அமைச்சர் தெரஸ் கோஃபே ஆகியோரது முன்னிலையில், இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது.

இத்தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான, நிலப்பரப்பு திட்டமிடல், தாவர சேகரிப்பு, மேம்பாடு, பூங்கா மேலாண்மை மற்றும் இது தொடர்பான பிற இனங்களில் தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை மற்றும் நிபுணத்துவத்தை வழங்குவதற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கியூவுக்கு உறுதியளிக்கிறது.

இங்கிலாந்து அரசின் பங்களிப்புடன் காலநிலை மாற்றங்களுக்கான துரிதப்படுத்தப்பட்ட அலையாத்தி காடுகள் திட்டத்தினை இங்கிலாந்து அமைச்சர் தெரஸ் கோஃபே துவைக்கிவைத்தார். இத்திட்டமானது, சமுகம் சார்ந்த அளவீடு – அறிக்கை சோதனை செய்தல் ஆகியவற்றை வடிவமைத்து தயாரித்து மற்றும் நடைமுறைப்படுத்துவதை விளக்குகிறது. தமிழ்நாடு அரசின் ஆலோசனையின்படி காடுகள், அலையாத்தி காடுகள், ஈரநிலங்கள் ஆகிய 3 காலநிலை திறன்மிகு கிராமங்களில் இத்திட்டம் செயல் படுத்தப்படும்.

English summary

The Tamil Nadu government has signed an MoU with the UK government to set up a botanical garden near Chennai.

Story first published: Thursday, July 27, 2023, 17:23 [IST]

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *