அவையில் பேசாத பிரதமர்.. எதற்கு புதிய நாடாளுமன்றக் கட்டடம்? … மூடிவிடலாமா?.. கொந்தளித்த சுபவீ | Modi to face no-confidence vote over Manipur violence

Newproject 2023 07 26t182839 603 1690376414.jpg

Chennai

oi-Kadar Karay

Google Oneindia Tamil News

சென்னை: மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றம் வரலாறு காணாத வகையில் முடங்கி உள்ளது. எதிர்க்கட்சிகள் இந்தக் கலவரம் தொடர்பாகப் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் கண்ணுக்கு எட்டிய தொலைவில் தென்படவில்லை.

பிரதமரின் மவுனம் பற்றியும், நாடாளுமன்றம் முடங்கி உள்ளது குறித்து சிலரிடம் பேசினோம்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், “மணிப்பூரில் நடப்பது ஒரு கொடூர சம்பவம் என்றால், அதைவிடக் கொடூரம் மோடியின் மவுனம். அவர் நாடாளுமன்றத்தில் மணிப்பூரைப் பற்றிப் பேச மறுக்கிறார். மிகச் சில நிமிடங்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசினார்.

Modi to face no-confidence vote over Manipur violence

ஆக, மோடியை மணிப்பூர் பற்றிப் பேச வைப்பதற்கே நான் இவ்வளவு பிடிவாதம் பிடிக்க வேண்டி இருக்கிறது. இந்தியாவில் உள்ள மிகச் சிறந்த வரலாற்று ஆசிரியர்களில் ஒருவரான ராமச்சந்திர குஹா, “மணிப்பூரில் நடப்பது கொடூரம் என்றால், மோடியிடம் நாம் காண்பது கோழைத்தனம்” என்று மிக வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எதிர்கொள்ள முடியாத, ஒரு கோழைத்தனம் உள்ளவரை நாம் பிரதமராகப் பெற்று இருக்கிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

Modi to face no-confidence vote over Manipur violence

நானும் சொல்கிறேன், இது ஒருவிதமான கோழைத்தனம்தான். இந்த விவகாரத்தை எதிர்கொள்வதற்கே துணிச்சல் இல்லாத ஒருவரை நாம் பிரதமராகப் பெற்றிருக்கிறோம் என்பது வருத்தத்திற்கு உரியது.

எனவே நாடாளுமன்றம் இதைப்பற்றி விவாதிக்கத் தயாராக இல்லை என்றால் நாடாளுமன்றம் அதற்குரிய தகுதியை இழந்துவிட்டது என்றே பொருள். ப.சிதம்பரம் உட்படப் பல மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறார்கள். அனைத்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சபாநாயகருக்கு அருகில் வந்து முழக்கம் இடுகிறார்கள்.

Modi to face no-confidence vote over Manipur violence

ஆனால், அமித்ஷா நாங்கள் விவாதிக்கத் தயாராக இருக்கிறோம் என்கிறார். பாஜக தானாகவே முன்வந்து இதை விவாதித்திருக்க வேண்டும் என்பதுதானே எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.

இவ்வளவு வலியுறுத்தியும் விவாதிக்கவில்லை. இதை நாட்டிற்கே அவமானம் என்றே சொல்ல வேண்டும். முன்னாள் பிரதமர் நேரு மணிப்பூரை, ‘இது ஒரு சுவிட்சர்லாந்த்’ என்று சொல்லுவார். அப்படி இந்தியாவின் சுவிட்சர்லாந்தாக இருந்த மாநிலம் எரிக்கப்பட்டுவிட்டு, சிதைக்கப்பட்டு உள்ளது.

Modi to face no-confidence vote over Manipur violence

நாம் ‘திராவிட மாடல்’ என்போம். அவர்கள் பதிலுக்கு ‘குஜராத் மாடல்’ என்பார்கள். ஆனால், உண்மையில் ‘மணிப்பூர் மாடல்’தான் நம் கண்முன்னே நேரடி சாட்சியாக இருக்கிறது.

மணிப்பூர் விவகாரத்தைப் பேசவேண்டியவர் பிரதமர்தான். இதை உள்துறை அமைச்சர் பேசி முடித்துவிடலாம் என்றால், உள்துறை அமைச்சரே பிரதமராக ஆகிவிடலாம். பிறகு எதற்குப் பிரதமர்? மவுனம் என்பது என்பது சில இடங்களில் தேவையாக இருக்கலாம். ஒட்டுமொத்தமாக நாடு சிதைந்துகொண்டிருக்கிறபோது பிரதமர் மவுனமாக இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே அமையும்.

Modi to face no-confidence vote over Manipur violence

பிரதமரைப் பேசச் சொன்னாலே நாடாளுமன்றம் முடங்கிவிடும் என்றால், பிறகு எதற்கு நாடாளுமன்றம்? பேசாமல் அதை மூடிவிட்டுப் போய்விடலாம். பின் எதற்காக புதிய நாடாளுமன்ற கட்டடம்? அவையில் பேசவே பேசாத பிரதமருக்கு நாடாளுமன்றம் புதிய கட்டடத்திலிருந்தால் என்ன? பழைய கட்டடத்திலிருந்தால் என்ன? பிறகு எதற்காக அதைக் கட்ட வேண்டும்? எதில் தான் அவர் பேசி இருக்கிறார்.

அவர் பொது மேடைகளில் அலங்காரமாகப் பேசுகிறார். வெளிநாடுகளுக்குப் போய் பேசுகிறார். இந்தியாவில்கூட பிற இடங்களில் பேசுவார். ஆனால், பேச வேண்டிய நாடாளுமன்றத்தில் பேச மாட்டார்.

இப்படி ஒரு விநோதமான பிரதமரை இந்தியா முதன்முறையாகப் பார்க்கிறது. ‘சற்று தாமதம் ஆகிவிட்டால்கூட பதறிப்போய் அடித்துப் பிடித்துக் கொண்டு நேரு நாடாளுமன்றத்திற்கு ஓடிவருவார்’ என்று நான் புத்தகங்களில் படித்திருக்கிறேன்.

Modi to face no-confidence vote over Manipur violence

ஆனால், மோடி எங்கு வேண்டுமானாலும் பேசுவேன். நாடாளுமன்றத்தில் மட்டும் பேச மாட்டேன் என்கிறார். இது நாட்டுக்கே அவமானம்” எனத் தடாலடியாகச் சொல்கிறார் சுப. வீரபாண்டியன்.

சி.பி.எம். கட்சியின் மத்திய அரசியல் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், “கடந்த 83 நாள்களுக்கு மேலாக மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டுள்ளது. அதுதான் உண்மை. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அம்மாநில முன்னாள் முதல்வர் உட்படப் பலர் பிரதமர் மோடியைச் சந்திக்க வேண்டும் என்று 10 நாள்கள் டெல்லியில் காத்திருந்தார்கள்.

ஆனால், அவர்களைச் சந்திக்காமல் பிரதமர் அமெரிக்கா போனார். அங்கிருந்து நாடு திரும்பியவர், மீண்டும் பாரிஸ் போனார். நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக கடந்த 19 ஆம் தேதி, மணிப்பூர் கலவரம் தொடர்பான ஒரு பெண்ணின் வீடியோ பதிவு சமூகவலைத்தளங்களில் மிகவேகமாகப் பரவியது.

Modi to face no-confidence vote over Manipur violence

அதற்குப் பிற்பாடு, சில பத்திரிகையாளர்களிடம் நாடாளுமன்றத்திற்கு வெளியே பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரத்தைக் கண்டிக்கிறேன் என்று பேசினார். அப்போது அங்குள்ள பத்திரிகையாளர்கள் யாரும் கேள்வி எழுப்பவில்லை.

இந்த மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஏற்கெனவே எதிர்க்கட்சியின் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுவிட்டது. அப்படி நோட்டீஸ் கொடுத்த பிறகு, பிரதமர் அதற்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டுமே தவிர, வெளியில் பத்திரிகையாளர்களிடம் பிரதமர் பேசியது ஒரு உரிமை மீறல் பிரச்சினை என்ற புகாரை மல்லிகார்ஜுன கார்கே எழுப்பி இருக்கிறார்.

அதன் பின்பாக சில நாள்களாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. அதற்குக் காரணம், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அல்ல, பிரதமர் மோடிதான் காரணம். மோடி நாடாளுமன்றத்தில் பதிலளிக்கட்டும். அதற்கு அறிக்கை வைக்கட்டும். அது தொடர்பாக விவாதிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றன.

அதெல்லாம் முடியாது.. டெல்லி சொன்னாதான் ராஜினாமா.. மணிப்பூர் பாஜக முதல்வர் பைரேன்சிங் பிடிவாதம்! அதெல்லாம் முடியாது.. டெல்லி சொன்னாதான் ராஜினாமா.. மணிப்பூர் பாஜக முதல்வர் பைரேன்சிங் பிடிவாதம்!

ஆனால், பாஜக வாருங்கள் விவாதிப்போம் என்கிறார்கள். பிரதமர் வர மறுக்கிறார். மோடி பாஜக ஆளும் மாநிலங்களுக்குப் போகின்றபோது எல்லாம் இரட்டை இன்ஜின் அரசு என்பார். அப்படி இரட்டை இன்ஜின் அரசு ஏன் பாஜக ஆளும் மாநிலம் குறித்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பேசவில்லை. அந்த மாநிலத்திற்கு ஏன் பிரதமர் மோடி போகவில்லை?” என்கிறார்

English summary

Modi to face no-confidence vote over Manipur violence

Story first published: Wednesday, July 26, 2023, 18:47 [IST]

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *