`திமுக அமைச்சர்களிடம் அடுத்தடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்துவது?’ – விகடன் கருத்துக்கணிப்பு முடிவு | vikatan polls regarding the recent raids on ministers ponmudi and senthil balaji

Black Modern Vlogger Youtube Banner 65 .jpg

மேலும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ போன்ற அமைப்புகளை எதிர்க்கட்சிகள்மீது ஏவிவிடுவதாகக் குற்றம்சாட்டின. இந்த நிலையில், அமலாக்கத்துறையின் இத்தகைய சோதனை நடவடிக்கை குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

விகடன் கருத்துக்கணிப்பு

விகடன் கருத்துக்கணிப்பு

அதில், தி.மு.க அமைச்சர்களிடம் அடுத்தடுத்து அமலாக்கதுறை சோதனை நடத்துவது… ‘அரசியல் காழ்ப்புணர்ச்சி’… ‘கடமையைச் செய்கிறது அமலாக்கத்துறை’… ‘கருத்து இல்லை‘ என மூன்று விருப்பத்தேர்வுகள் கொடுக்கப்பட்டன. இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவில் அதிகபட்சமாக 55 சதவிகித வாசகர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றும், 40 சதவிகித வாசகர்கள் கடமையைச் செய்கிறது அமலாக்கத்துறை என்றும், 5 சதவிகித வாசகர்கள் கருத்து இல்லை என்றும் வாக்களித்திருக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *