குற்றவாளியை கண்காணிக்க.. மொபைல் “லைவ் லொகேஷனை” போலீஸ் கேட்க முடியுமா? சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு | Can accused be forced to turn on their cell phone ‘live location’ and share to track them?, Supreme Court examines

Home 1690294516.jpg

Delhi

oi-Nantha Kumar R

Google Oneindia Tamil News

டெல்லி: ஜாமீன் பெறும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வகையில் அவர்களின் செல்போன் ‛லைவ் லொகேஷனை’ ஆன் செய்யும்படி கூறுவது சரியா? என்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பாக பரபரப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம், வங்கி பணமோசடி தொடர்பான வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அந்த வகையில் சக்தி போக் ஃபுட்ஸ் எனும் நிறுவனம் ரூ.3,269.4 கோடி வங்கி மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தது.

Can accused be forced to turn on their cell phone live location and share to track them?, Supreme Court examines

இதுதொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. வழக்கில் நிறுவனத்தின் ஆடிட்டர் ராமன் புராருவா என்பவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவரை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.

இந்த கைது நடவடிக்கை 2021ம் ஆண்டில் நடந்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அவர் மனுத்தாக்கல் செய்து இருந்தார். அவருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும் ராமன் புராருவாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

அப்போது புதிதாக ராமன் புராருவா தனது செல்போன் ‛லைவ் லொகேஷனை ஆன்’ செய்து விசாரணை அதிகாரியிடம் பகிர வேண்டும். அவரது இருப்பிடத்தை அறிந்து கொள்ளும் வகையில் இதனை அவர் ஜாமீன் காலம் முழுவதும் பின்பற்ற வேண்டும்” என தெரிவித்து இருந்தது. இந்நிலையில் செல்போனில் ‛லைவ் லோகேஷனை ஆன்’ செய்து வைக்க கூறிய டெல்லி உயர்நீதிமன்றத்தின் நிபந்தனை மற்றும் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் முன்பாக பெரிய கேள்வி.. செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி உத்தரவு குறித்து வழக்கறிஞர்!சுப்ரீம் கோர்ட் முன்பாக பெரிய கேள்வி.. செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி உத்தரவு குறித்து வழக்கறிஞர்!

அதாவது ஜாமீன் வழங்கிவிட்டு அவர்களின் செல்போன் ‛லைவ் லோகேஷனை’ விசாரணை அமைப்புகளிடம் பகிர்ந்து கொள்ள கட்டாயப்படுத்த முடியுமா?. ஆனாலும் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ள டெல்லி உயர்நீதிமன்றத்தின் வழக்கை மேற்பார்வையிட்டு விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இதற்கிடையே அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனவும் அமலாக்கத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த 2 வழக்குகளும் நேற்று உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் சஞ்சய் கரோல் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது டெல்லி உயர்நீதிமன்றம் சார்பில் ராமன் புராருவாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டதோடு, அமலாக்கத்துறையின் மனுவை தள்ளுபடி செய்தது.

அதோடு குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் ஜாமீன் பெறும்போது அவரது செல்போன் ‛லைவ் லொகேஷனை’ ஆன் செய்து வைத்திருக்கும்படி எப்படி நிபந்தனை விதிக்க முடியும்? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் எந்த வகையான கன்டிஷன்கள் விதிக்கப்பட்டுள்ளன. அதனை அனுமதிக்க முடியுமா? இல்லையா? என்பதை ஆராய வேண்டி உள்ளது” எனக்கூறி விளக்கமளிக்க நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டது.

English summary

Is it right to ask bailed criminals to turn on their cell phone ‘live location’ to track them? A case has been filed in the Supreme Court and a sensational order has been issued in this regard.

Story first published: Tuesday, July 25, 2023, 19:46 [IST]

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *