தடையை மீறி மணிப்பூர் பயணம்: யார் இந்த ஸ்வாதி மாலிவால்… ஏன் தடுக்கப்பட்டார்?! | Manipur voilance- Who is this Swati Maliwal? Why was she blocked

Vscs.jpg

இதற்கு முன்பு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜூலை 20-ல் ஸ்வாதி மாலிவால் கடிதம் எழுதியிருந்தார்.

மணிப்பூரில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக அரங்கேறிவரும் வன்முறைச் சம்பவங்களைக் கருத்தில்கொண்டு பாதுகாப்பு காரணங்களால் பலருக்கு அங்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூருக்குச் சென்றபோதும் தடுத்து நிறுத்தப்பட்டார். நிலைமை இவ்வாறு இருக்க, “மணிப்பூரின் பதற்றங்களையெல்லாம் கடந்து அங்கு சென்று உண்மையை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுவேன்’’ என்கிறார் ஸ்வாதி மாலிவால்.

மணிப்பூர்

மணிப்பூர்

யார் இந்த ஸ்வாதி மாலிவால்?

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஊழலுக்கு எதிரான இந்திய இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக மாலிவால் இருந்தார். 2015-ல் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அமைந்த பிறகு, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக மாலிவால் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் குரல் கொடுத்துவருகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *