Senthil Balaji Case Appeal In Supreme Court What Kapil Sibal Argued Check Details Here | உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு… கபில் சிபல் வாதிட்டது என்ன? – முழு விவரம்!

306131 Jul210012.png

Senthil Balaji Supreme Court: தமிழ்நாடு அமைச்சரான செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த மாதம் சென்னையில் கைது செய்தனர். பண மோசடி தடுப்புச்சட்ட வழக்கின் அவரை கைது செய்தது செல்லாது என கூறி செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். 

அந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வில் இருவேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, மூன்றாவது நீதிபதி செந்தில் பாலாஜியின் கைது செல்லும் என தீர்ப்பளித்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தொடரப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறைக்க அந்த உரிமையில்லை

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை இன்று விசாரணை மேற்கொண்டனர். செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அவர் விஜய் மதன்லால் சவுத்ரி வழக்கின் தீர்ப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் இல்லை என்று சுட்டிக்காட்டி வாதத்தை தொடங்கினார். 

குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, பிரிவு 167-ஐ குறிப்பிட்ட கபில் சிபல், ஒரு காவல் நிலையத்திற்குப் பொறுப்பான அதிகாரி அல்லது விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரி மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவரை போலீஸ் காவலில் எடுக்க முடியும் என்று கூறினார். பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறையின் அதிகாரிகள் ‘காவல் நிலையத்தின் பொறுப்பு’ அல்லது ‘காவல்துறை அதிகாரிகள்’ அவர்கள் ஒரு நபரை போலீஸ் காவலில் எடுக்க உரிமை இல்லை என சிபல் வாதிட்டார்.

மேலும் படிக்க | காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்படும் செந்தில் பாலாஜி..?

செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற காரணத்திற்காக முதல் 15 நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் வைக்க அமலாக்கத்துறையினருக்கு உரிமை இல்லை என்று மூத்த வழக்கறிஞர் மேலும் வாதிட்டார். அனுபம் குல்கர்னி வழக்கில், காவலில் வைக்கப்பட்ட முதல் 15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலில் இருக்க முடியாது. விகாஸ் மிஸ்ரா வழக்கில் அனுபம் குல்கர்னி ஒரு ஒருங்கிணைப்பு பெஞ்சால் சந்தேகப்பட்டாலும், முந்தையது நிராகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அபத்தமான முடிவுகளுக்கு வழிவகுக்கும்

இதையடுத்து, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சட்டப்பிரிவு 19 பணமோசடி தடுப்புச் சட்டத்தின் படி கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு உரிமை உண்டு என்று சுட்டிக்காட்டினார். மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகள் பணமோசடி தடுப்புச் சட்டத்திற்கும் பொருந்தும் என்றும் எனவே இதில் எந்த முரண்பாடும் இல்லாத நிலையில் பணமோசடி தடுப்புச் சட்டம் இந்த விசாரணைக்கும் பொருந்தும் என்றார். “நீதிமன்றக் காவலுக்கு அனுப்புவதற்காக மட்டுமே நான் ஒருவரைக் கைது செய்யும் சூழ்நிலை இருக்க முடியாது. கைது செய்வதன் நோக்கம் விசாரணைதான்”, என்றார். 

15 நாட்களுக்குப் பிறகு போலீஸ் காவலில் வைப்பது சாத்தியமில்லை என்ற உறுதியான பார்வை இருந்தால், அது அபத்தமான முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்றார். போலீஸ் காவலை மாஜிஸ்ட்ரேட் மறுத்ததையும், உயர் நீதிமன்றம் பின்னர் அந்தத் தீர்ப்பை ரத்து செய்ததையும் எடுத்துக்காட்டி துஷார் மேத்தா வாதிட்டார். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் போது முதல் பதினைந்து நாட்கள் காலாவதியாகிவிட்டால், அமலாக்கத்துறை போலீஸ் காவலில் இருக்க முடியாது என்று அர்த்தமா என அவர் கேள்வி எழுப்பினார்.

‘எதுவும் நடக்காது’

கபில் சிபல் போலீஸ் காவலில் இருந்து இடைக்கால பாதுகாப்பு கோரினாலும், உச்ச நீதிமன்றம் அத்தகைய உத்தரவை பிறப்பிக்க இயலாது என கூறி வாய்மொழி, “எதுவும் நடக்காது” என உறுதியளித்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதி, அமலாக்கத்துறைக்கு ஆதரவாக தீர்ப்பளித்த பிறகு, 15 நாட்கள் காலத்தை எந்த தேதியிலிருந்து கணக்கிட வேண்டும் என்பதை தீர்மானிக்க டிவிஷன் பெஞ்சிற்கு இந்த வழக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று இந்த அமர்வு சுட்டிக்காட்டியது. 

“நாங்கள் போலீஸ் காவலில் எடுக்க முடியாது, ஏனெனில் 15ஆவது நாள் எப்போது தொடங்கும் என்பதை டிவிஷன் பெஞ்ச் முடிவு செய்யும் என்று மூன்றாவது நீதிபதி கூறியதால், நாங்கள் சென்று போலீஸ் காவலில் எடுக்க முடியாது”,  துஷார் மேத்தாவும் கூறினார். “இதற்கிடையில் டிவிஷன் பெஞ்ச் எங்களுக்கு எதிராக முடிவு செய்தால், நாங்கள் எங்கு செல்வோம்?”, சிபல் கேட்டார். “எதுவும் நடக்காது” என்று நீதிபதி போபண்ணா உறுதியளித்தார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை ஜூலை 26ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

மேலும் படிக்க | செந்தில் பாலாஜி கைது செல்லும் என மூன்றாவது நீதிபதி தீர்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *