சுடச்சுட சிக்கன் தந்த McDonalds… 8 லட்சம் டாலர் இழப்பீடு தர உத்தரவிட்ட கோர்ட்; ஏன் தெரியுமா?|McDonald-s ordered to pay 8 lakh dollar

44555735932 38aa1f6689 B.jpg

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், மெக்டொனால்டு கடையில் இருந்து சூடான சிக்கன் நக்கெட்ஸை ஒரு தம்பதியினர் வாங்கி இருக்கின்றனர். காரில் அமர்ந்திருந்த தன்னுடைய நான்கு வயதுக் குழந்தை ஒலிவியா காராபல்லோவிடம் அந்த பார்சலை கொடுத்தபோது, ஆவலோடு குழந்தை அதனை திறந்திருக்கிறது.

பாக்ஸில் இருந்து சுடச்சுட சிக்கன் நக்கெட்ஸ் குழந்தையின் காலில் பட்டதால், குழந்தையின் கால் வெந்ததோடு வலியில் துடித்துள்ளது.

சரியாக பார்சல் பேக் செய்யப்பட்டிருந்தால், குழந்தை இந்தளவு வலியால் துடித்திருக்காது என வருந்தியவர்கள், மெக்டொனால்டு நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். நிறுவனத்தின் அஜாக்கிரதையைச் சுட்டிக்காட்டி, இழப்பீடு வழங்குமாறு கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் நடைபெற்று நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில், தற்போது அந்த வழக்கிற்கு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மெக்டொனல்டு நிறுவனமோ, குழந்தையின் வலியும், எரிச்சலும் மூன்று வாரங்களுக்குள் முடிந்துவிட்டதால், 1,56,000 டாலர்கள் மட்டுமே தர முடியும் என வாதம் செய்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *