எங்கே உண்டு நீதி? ஜூலை 25-க்குள் ப்யூட்டி பார்லர்களை மூட அரசு உத்தரவு; போராட்டத்தில் இறங்கிய பெண்கள்|Women protest against beauty salon closures

Sunrise 4021128 1920 1 .jpg

இந்த ஆணையை தாலிபான் அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரி, ஜூலை 19 அன்று ஆப்கானிஸ்தான் பெண்கள், தலைநகர் காபூலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 50 பெண்கள் வரை இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அழகு நிலையங்களை நடத்தி வரும் பெண்கள் தங்கள் குடும்பங்களுக்கு வருமானம் இல்லாமல் போய்விடும் என்று அச்சத்தோடு கூறியுள்ளனர். 

அனைத்து அழகு நிலையங்களும் மூடப்படுவதால் 60,000 பேர் வேலை இழக்க நேரிடும் என ஆப்கானிஸ்தானின் வர்த்தக சபை தெரிவித்துள்ளது. 

அழகு நிலையம்

அழகு நிலையம்

பெண்கள் மீதான தாலிபன் அரசின் தேவையற்ற கட்டுப்பாடுகளுக்கு சர்வதேச அளவில் இருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டாலும், தொடர்ந்து தாலிபன் அரசு பெண்களை அடக்குவதிலும், ஒடுக்குவதிலும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

கலாசாரமும், கட்டுப்பாடுகளும் பெண்களுக்கு மட்டுமே என கருதும் அரசும், சட்டமும், மனிதர்களும் `மனநோயாளிகளே’ என நெட்டிசன்கள், இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *