விஐபிக்களே அலர்ட்.. 30,000 வேலைகள்! அரசு நடத்தும் 100 முகாம்கள் – இவ்வளவு பெரிய நிறுவனங்கள் வருதா? | TN govt is to conduct 100 private sector employment camps across for 30000 jobs

Screenshot13557 1689698411.jpg

Jobs

oi-Noorul Ahamed Jahaber Ali

Google Oneindia Tamil News

சென்னை: கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை தமிழ்நாடு அரசு நடத்த இருக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், “டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.07.2023 (சனிக்கிழமை) அன்று சென்னையில் உள்ள மாநிலக்கல்லூரியில் காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நடைபெற உள்ளது.

TN govt is to conduct 100 private sector employment camps across for 30000 jobs

இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வேலை வாய்ப்பளிக்கும் முன்னணி நிறுவனங்களுடனான கூட்டம் 17.07.2023 அன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களும், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களும் தலைமையேற்று நடத்தினர்.

இந்த கூட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் அரசு இணை செயலாளர், வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் இயக்குநர், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் MRF Tyres, India Cements, Michelin, ABT, Maruthi, Apollo Tyres, Ashok Leyland, Foxconn Technology, Hyundai Motors, Yamaha India, JBM Auto, J.K. Tyres, Mitsuba India, Royal Enfield, Salcomp Technologies, Seyoon Technologies. Tube Products, Wheels India Ltd, Zebronics, Saint-Gobain, Westside. Trent Ltd, India Tata Electronics உள்ளிட்ட 25 முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளும், FICCI, CII, போன்ற தொழில் கூட்டமைப்பு நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்கள் கூட்டமைப்பின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்வதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் 300க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 30,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், மென்பொருள் தயாரிப்பவர், தையல் கற்றவர்கள். பிட்டர், டர்னர், வெல்டர், சி.என்.சி. ஆப்ரேட்டர், போன்ற ஐ.டி.ஐ, தொழில் கல்வி பெற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளன.

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் வேலையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலை நாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொண்டு வேலையளிப்போர் தகுதியான ஆட்களை தேர்வு செய்யுமாறும், வேலைதேடும் இளைஞர்கள் https://forms.gle/6zc1DiKgeGzSpETK6 என்ற Google Link-ல் பதிவு செய்து தகுதியான வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் திரு. கொ. வீரராகவ ராவ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.” என்று குறிப்பிட்டு உள்ளது.

English summary

Tamil Nadu Government is going to conduct 100 private sector employment camps across Tamil Nadu on the occasion of Karunanidhi Centenary.

Story first published: Tuesday, July 18, 2023, 22:10 [IST]

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *