வாஜ்பாய் காலத்துல எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனே.. அடப்பாவமான பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி! | Loksabha Election: Alliance Parties details of BJP lead NDA

Bjp1 1689665553.jpg

Delhi

oi-Mathivanan Maran

Google Oneindia Tamil News

டெல்லி: மத்தியில் ஆளும் சர்வ வல்லமை பொருந்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அதிமுக உள்ளிட்ட 38 கட்சிகள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் டெல்லி கூட்டத்தில் பங்கேற்கும் பாஜக கூட்டணி கட்சிகள் பட்டியலே சமூக வலைதளங்களில் கேலி பொருளாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

நாடு விடுதலை அடைந்தது முதல் எத்தனையோ ஆளும்/ எதிர்க்கட்சி கூட்டணிகள் அமைந்திருக்கின்றன. 1977-ல் ஜனதா எனும் எதிர்க்கட்சிகள் கூட்டணி இந்திரா காந்தி எனும் இரும்பு பெண்மணியை வீழ்த்தியது. 1989-ல் இந்திராவின் புதல்வர் ராஜீவ் காந்தியை வெலவெலக்க வைத்து அதிகாரத்தை கைப்பற்றியது விபி சிங் எனும் மாமனிதர் தலைமையிலான தேசிய முன்னணி. அதன்பின்னர் 1996-98 காலகட்டத்தில் ஐக்கிய முன்னணி என்கிற வலுவான மாநில கட்சிகள் அணி உருவெடுத்தது. இந்தப் பின்னணியில் 1998-ல் உருவான மற்றொரு அணிதான் தேசிய ஜனநாயகக் கூட்டணி.

Loksabha Election: Alliance Parties details of BJP lead NDA

வாஜ்பாய் NDA: பாஜக தலைமையில் 1998-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவானது. 1998-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக வாஜ்பாய் இருந்தார். அன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சமதா கட்சி, அதிமுக, சிவசேனா, அகாலிதளம் உட்பட மொத்தம் 28 கட்சிகள் இருந்தன. இந்த கூட்டணியில் அதிமுக வெளியேறி வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்த நிலையில் திமுகவும் இடம்பெற்றிருந்தது. காங்கிரஸுக்கு எதிரான மிக வலிமையான பல்வேறு கட்சிகளை கொண்டதாக தேசிய ஜனநாயகக் கூட்டணி இருந்தது.

38 அரசியல் கட்சிகள்: அப்படிப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்றைக்கும் 38 அரசியல் கட்சிகளைக் கொண்டதாக இருக்கிறது. ஆனால் இந்த 38 கட்சிகளில் பாஜக, அதிமுகதான் முதன்மையான கட்சிகள். எஞ்சிய கட்சிகள் பெரும்பாலும் சிதறு தேங்காய் கட்சிகள், லெட்டர் பேடு கட்சிகள், வடகிழக்கு மாநில கட்சிகள் என்ற லிஸ்ட்டில்தான் இருக்கின்றன.

Loksabha Election: Alliance Parties details of BJP lead NDA

NDA கட்சிகள்: சிவசேனாவின் ஒரு கோஷ்டியாக ஏக்நாத் ஷிண்டே அணி, தேசியவாத காங்கிரஸின் ஒரு கோஷ்டியான அஜித்பவார் அணி, பாஸ்வான் கட்சியின் ஒரு கோஷ்டியான ராஷ்டிரிய லோக் ஜன சக்தி, உ.பி. மாநில குர்மி ஜாதி கட்சியான அப்னா தள், மேகாலயா மாநிலத்தின் என்பிபி, நாகாலாந்தின் என்டிபிபி, ஜார்க்கண்ட் மாநில குட்டி கட்சியான அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன், சிக்கிம் மாநில சிக்கிம் கிரந்திகிரி மோர்ச்சா, மிசோரம் மாநிலத்தின் மிசோ தேசிய முன்னணி, திரிபுராவின் ஐபிஎப்டி, நாகாலாந்தின் என்பிஎஃப், இந்திய குடியரசு கட்சியின் அத்வாலே கோஷ்டி, அஸ்ஸாம் கன பரிஷத், வட தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாமக, வாக்கு வங்கியே இல்லாத தமாகா, அஸ்ஸாமின் யுபிபிஎல், உபி ஓபிசி கட்சியான ராஜ்பாரின் எஸ்பிஎஸ்பி, அகாலிதளத்தின் ஒரு கோஷ்டி, கோவா மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி , இந்திய தேசிய லோக் தள் கட்சியில் இருந்து உடைந்த ஜனநாயக் ஜனதா கட்சி, மகாராஷ்டிராவில் அறியப்படாத பிஜேபி(PJP), ஆர்எஸ்பி (RSP), ஜேஎஸ்எஸ்(JSS), மணிப்பூரின் குக்கி மக்கள் முன்னணி, மேகாலயாவின் யுடிபி, ஹெச்பிடி, உபி ஜாதிய கட்சியான நிஷாத் கட்சி, புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ், பீகார் அவாமி மோர்ச்சா, ஆந்திராவின் பவண் கல்யாணின் ஜனசேனா , ஹரியானாவின் ஹெஎல்பி, கேரளாவின் அறியப்படாத பாரத் தர்ம சேனா, கேரளா காமராஜ் காங்கிரஸ், தமிழ்நாட்டின் புதிய தமிழகம், பாஸ்வான் கட்சியின் மற்றொரு பிரிவான லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் பாஸ்வான்) இப்படியானவைதான் இன்றைய தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

நிழல் நிஜமாகிறது.. சிதம்பரம் வைத்த புள்ளி.. கார்த்தி போடும் கோலம்.. அதிரும் டெல்லி.. கதிகலங்கும் பாஜகநிழல் நிஜமாகிறது.. சிதம்பரம் வைத்த புள்ளி.. கார்த்தி போடும் கோலம்.. அதிரும் டெல்லி.. கதிகலங்கும் பாஜக

அடித்தளமே இல்லையே: இந்த 38 கட்சிகளில் 25-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு லோக்சபாவில் ஒரு எம்பி கூட இல்லை. 9 கட்சிகளுக்குதான் 10க்கும் மேற்பட்ட லோக்சபா எம்.பிக்கள் உள்ளனர். 27 கட்சிகளுக்கு ராஜ்யசபாவில் ஒரு எம்பி கூட இல்லை. 7 கட்சிகளுக்கு எந்த ஒரு மாநிலத்திலும் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை. காங்கிரஸை உள்ளடக்கிய கூட்டணிக்கு மாற்றாக நாங்களும் 38 கட்சிகளை வைத்திருக்கிறோம் என கணக்கு காட்டுகிற நிலைமைக்கு மத்தியில் ஆளும் பாஜக தள்ளப்பட்டிருப்பதுதான் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது.

English summary

Here is Details of Alliance Parties of BJP lead National Democratic Alliance members.

Story first published: Tuesday, July 18, 2023, 13:05 [IST]

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *