மத்திய அரசு நிறுவனம்.. 300 பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு, ஐடிஐ தகுதி போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க! | Cochin Shipyard Recruitment: 300 vacancy, How to apply, Eligibility details

Home 1689560199.jpg

Jobs

oi-Mani Singh S

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசு நிறுவனமான கொச்சியில் உள்ள கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்தில் 300 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான வயது வரம்பு, கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

கேரள மாநிலம் கொச்சியில் கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும்தளம் மற்றும் பராமரிப்பு வசதி கொண்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் இதுவாகும். இந்த நிறுவனத்தில் இந்திய கடற்படைக்கு தேவையான கப்பல்களும் கட்டப்பட்டு வருகின்றன. பரமாரிப்பு பணிகளும் இங்கு நடைபெறுவது வழக்கம்.

 Cochin Shipyard Recruitment: 300 vacancy, How to apply, Eligibility details

மத்திய அரசின் மினிரத்னா நிறுவனங்களின் கீழ் செயல்படும் கொச்சின் கப்பல் கட்டும் (Cochin Shipyard Limited (CSL))தளத்தில் Workmen- பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஜூலை 14 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 28 ஆகும்.

எத்தனை பணியிடங்கள்: வெல்டர், பிட்டர், மெக்கானிக்கல் டீசல், மெக்கானிக் மோட்டார் வெக்கில், பிளம்பர், பெயிண்டர், எலக்ட்ரிஷியன், எலக்ட்ரிஷியன் மெக்கானிக், இன்ஸ்ட்ரூமண்ட் மெக்கானிக், ஷிப்ரைட் வூட் உள்ளிட்ட பணிகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பபடுகின்றன. மொத்தம் 300 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

கல்வித்தகுதி என்ன?: பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதனுடன் துறை சார்ந்த அனுபவமும் கேட்கப்பட்டுள்ளது. இது பற்றி முழு விவரங்களை தேர்வு குறித்த அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 30-வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வுகளும் உண்டு.

தேர்வு முறை: ஆன்லைன் மூலமாக தேர்வு நடைபெறும், அதன்பிறகு செய்முறை தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மத்திய அரசு வேலை.. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.. கை நிறைய சம்பளம்.. விண்ணப்பிக்க ரெடியா?மத்திய அரசு வேலை.. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.. கை நிறைய சம்பளம்.. விண்ணப்பிக்க ரெடியா?

சம்பளம் எவ்வளவு?: முதலாம் ஆண்டு – மாதம் ரூ. 23,300 சம்பளம் வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு – மாதம் ரூ. 24, 000 சம்பளம் வழங்கப்படும், மூன்றாம் ஆண்டு- மாதம் ரூ. 24, 800 சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்: தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ. 600 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிப்பது எப்படி?: விண்ணப்பதாரர்கள் www.cochinshipyard.in என்ற இணையதளத்திற்கு சென்று Career page என்ற பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் விண்ணப்பதாரர்களுக்குதேவையான கல்வி தகுதி அனுபவம் போன்ற விவரங்களை இந்த இணையதள பக்கத்தில் https://cochinshipyard.in/careerdetail/career_locations/550 என்று தெரிந்து கொள்ள முடியும்.

English summary

Cochin Shipyard Company, a central government company in Kochi, has released a notification to fill up 300 posts. You can check the details like age limit, educational qualification required to apply for the exam here.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *