கோடிக்கணக்கில் வருமானம்.. பிரபல யூடியூபர் வீட்டில் வருமான வரி சோதனை.. 24 லட்சம் கைப்பற்றப்பட்டதா? | Income Tax officials raid YouTuber’s house in Uttar Pradesh: 24 lakh cash found during raid

Incometax 1689617324.jpg

Lucknow

oi-Mani Singh S

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பிரபல யூடியூபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். யூடியூப் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டியதாகவும் ஐடி சோதனையில் 24 லட்சம் ரொக்கமாக கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போன்கள் ஆதிக்கம் அதிகரித்து விட்ட இன்றைய கால காட்டத்தில் சமூக வலைத்தளங்களில் மக்கள் அதிகம் மூழ்கி கிடக்கிறார்கள். இதை பயன்படுத்தி பேஸ்புக், யூடியூப் போன்ற நிறுவனங்களும் நல்ல வருமானம் ஈட்டுகின்றன. குறிப்பாக யூடியூப்களில் வீடியோ போடுபவர்களுக்கு அந்நிறுவனம் கணிசமான தொகையை கொடுக்கிறது. இதனால், பலரும் யூடியூப்களில் வீடியோ போட்டு நல்ல வருமானம் ஈட்டுகிறார்கள்.

Income Tax officials raid YouTubers house in Uttar Pradesh: 24 lakh cash found during raid

பொதுவான தகவல்கள், சுற்றுலா, பைக் ரைடிங், சினிமா விமர்சனம், பஸ் ரிவியூ, சமையல் வீடியோக்கள் என பலரும் தங்களுக்கு பிடித்தமான துறைகளில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதில் லட்சகணக்கில் வருமானமும் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரபல யூடியூபர் தஸ்லிம் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

பல ஆண்டுகளாக யூடியூப் சேனல் நடத்தி வரும் தஸ்லிம் ஷேர் மார்க்கெட் தொடர்புடைய வீடியோக்களை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். யூடியூப் சேனலில் அவர் போடும் வீடியோக்களுக்கு லட்சகணக்கில் வியூஸ்கள் வரும் என்று அவரது சகோதர் தெரிவித்தார். இந்த நிலையில் தான் சட்ட விரோதமாக பணம் ஈட்டியாதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

வருவாயாக கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாகவும் மேலும் சட்ட விரோதமாக இந்த வருமானத்தை பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து தான் அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது ரூ. 24 லட்சம் ரொக்க பணத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தஸ்லிம் சட்ட விரோதமாக எதையும் சம்பாதிக்கவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். யூடியூபர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதும் ரூ.24 லட்சம் கைப்பற்றப்பட்டதும் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயிலில் செந்தில் பாலாஜி.. ஈடி ஆபிசில் பொன்முடி.. ஒரே நாளில் 2 சம்பவம்.. திமுகவில் உச்சகட்ட பரபரப்பு ஜெயிலில் செந்தில் பாலாஜி.. ஈடி ஆபிசில் பொன்முடி.. ஒரே நாளில் 2 சம்பவம்.. திமுகவில் உச்சகட்ட பரபரப்பு

தஸ்லீமின் சகோதர் இது குறித்து கூறுகையில், “Trading Hub 3.0 என்ற யூடியூப் சேனலை தஸ்லீம் நடத்தி வருகிறார். ஷேர் மார்க்கெட் தொடர்பான வீடியோக்களை யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதில் கிடைக்கும் வருமானத்திற்கு வருமான வரியும் தஸ்லீம் செலுத்தி வருகிறார். நாங்கள் யூடியூப் சேனலை நடத்துகிறோமே தவிர வேறு எந்த தவறான செயலிலும் ஈடுபடவில்லை.” என்றார்.

English summary

Income Tax officials raided the house of a popular YouTuber in Uttar Pradesh. It is reported that he earned crores from YouTube and 24 lakhs in cash was seized during the IT raid.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *