“காமராஜருக்கும் மோடிக்கும் ஒற்றுமை இருக்கு” அடித்து சொன்ன அண்ணாமலை.. அவரே சொன்ன விளக்கத்தை பாருங்க | “Kamaraj and Modi have similarities” – Tamil Nadu BJP President Annamalai

Newproject 2023 07 16t220623 863 1689525394.jpg

Madurai

oi-Mani Singh S

Google Oneindia Tamil News

மதுரை: முழு அரசியல்வாதிகளாக இருப்பவர்களால் தான் தவறுகள் நடக்கின்றன என்றும் காமராஜருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே ஒற்றுமை உள்ளது என்றும் தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை கூறினார்.

மதுரையில் காமராஜர் பொற்கால ஆட்சி சாதனைகள் என்ற பெயரில் மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது:- அரசியல் மாற்றம் வந்துவிட்டால் சமுதாய மாற்றம் தானக வந்துவிடும் என்பதற்கு இரண்டு தலைவர்களுமே (காமராஜரும் மோடியும் ) பெரிய இலக்கணமாக இருந்தவர்கள்.

 Kamaraj and Modi have similarities - Tamil Nadu BJP President Annamalai

காமராஜர் ஆட்சி காலத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வந்தன. காமராஜர் ஆட்சிக்கு பிறகு எத்தனை தொழிற்சாலைகள் வந்து இருக்கிறது என்று பார்த்தால் நிச்சயமாக கிடையாது. ஆக்கப்பூர்வமாக தொழில்துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக காமராஜர் இருந்தார். காமராஜர் ஆட்சி காலத்தில் பெண்களுக்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டது. முழு அரசியல்வாதிகளாக இருப்பவர்களால் தான் தவறுகள் நடக்கின்றன.

ராஜ்யசபா எம்பியாகும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை? வலைதளங்களில் பரவும் தகவல்! உண்மையா? ராஜ்யசபா எம்பியாகும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை? வலைதளங்களில் பரவும் தகவல்! உண்மையா?

காமராஜருக்கும் மோடிக்கும் ஒற்றுமை இருக்கு: அரசியலில் நமக்கு நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நாம் கனவு காண்பது போல அரசியல் மாறும். காமராஜருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே ஒற்றுமை உள்ளது. எப்படியென்றால் காமராஜர் ஆட்சியில் தொழில் புரட்சி நடந்தது. அதேபோன்று தற்போது மோடி ஆட்சியிலும் தொழில் புரட்சி நடந்து வருகிறது. தமிழகத்தில் காமராஜருக்கு நிகராக யாரும் இல்லை என்ற போதிலும் காமராஜர் அமைச்சரவையில் இருந்தது போன்று கூட தற்போதைய அமைச்சர்கள் இல்லை.

இந்திய மக்களின் இன்றைய சராசரி வயது 37 ஆக உள்ளது. 142 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 80 கோடி மக்கள் 33- வயதுக்கு கீழ் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் காமராஜர் இறந்து 30 ஆண்டு காலம் கழித்து பிறந்தவர்கள். கிட்டதட்ட இந்தியாவின் வாக்காளர்கள் 90 கோடி பேர் காமராஜரை புத்தகத்தில் படித்து இருப்பார்கள். காமராஜர் வாழ்க்கை புத்தகங்களில் கூட இருட்டடிப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

 Kamaraj and Modi have similarities - Tamil Nadu BJP President Annamalai

மக்களின் வரிப்பணம் வீண் ஆகிறது: ஐதராபாத் ஸ்டேட் வங்கியில் பணம் வைத்து இருக்கிறார். ஸ்விஸ் வங்கியில் பல கோடி டெபாசிட் செய்து இருக்கிறார் என்று கருணாநிதி குற்றச்சாட்டு வைத்தார். இந்த குற்றச்சாட்டுக்கு கூட கண்ணியமாக காமராஜர் பதில் கொடுத்தார். அவரை கேவலமாக பேசிவிட்டு தற்போது திமுக காமராஜர் பெயரை உச்சரிக்கிறது. காமராஜர் மிழகத்தில் ஆட்சி செய்த 9 ஆண்டுகளில் 18 ஆயிரம் பள்ளிகளை திறந்தார்.

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதால் மக்களின் வரிப்பணம் வீண் ஆகிறது. செந்தில் பாலாஜிக்காக மொத்த அரசு நிர்வாகமும் பின்னால் நிற்கிறது. 2024 ஆம் ஆண்டு மோடி மீண்டும் வெற்றி பெறும் போது நாம் எதிர்பார்க்கும் உண்மையான அரசியல் மாற்றம் இந்தியாவில் ஏற்படும். ஊழல் வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தென் இந்தியா மாநிலங்களில் இருந்து பாஜகவிற்கு அதிக எம்.பிக்களை கொடுக்க வேண்டும். மோடி என்ற ஆளுமை இருக்கும் போது 39 எம்.பிக்களை ஏன் அனுப்பி வைக்க முடியாது” இவ்வாறு அவர் பேசினார்.

English summary

Tamil Nadu BJP president K Annamalai said that mistakes are made by those who are full politicians and there is unity between Kamaraj and Prime Minister Modi.

Story first published: Sunday, July 16, 2023, 22:10 [IST]

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *