மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மனைவி மரணம்.. 6 மாதத்திற்கு பிறகு விலகிய மர்மம்.. நடந்தது என்ன? | do you know how did Singer Lisa Presley died?

8 Tile 1689413963.jpg

Washington

oi-Vishnupriya R

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க பாடகி லிசா பிரஸ்லி எடை குறைப்பு அறுவை சிகிச்சையின் போது குடல் பகுதியில் ஏற்பட்ட உள்காயங்களால் அவர் உயிரிழந்தது 6 மாதங்களுக்கு பிறகு தெரியவந்துள்ளது.

பிரபல பாடகர் எல்விஸ் பிரஸ்லியின் மகளும் மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மனைவியுமான லிசா பிரஸ்லி கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார். இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இவருடைய முன்னாள் கணவர் டேனி கியோஃபும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள லிசாவுக்கு சொந்தமான இடத்தில் வசித்து வந்தார்.

do you know how did Singer Lisa Presley died?

அப்போதுதான் பிரஸ்லிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. அவர் லிசாவுக்கு சிபிஆர் சிகிச்சை அளித்துள்ளார். ஆனாலும் லிசாவுக்கு மயக்கம் தெளியாததால் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவர் கோமாவுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் வைக்கப்பட்டது. ஆயினும் ஒரு கட்டத்தில் அவர் உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் இவருடைய இறப்புக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது பல ஆண்டுகளுக்கு முன்பு லிசா பேரியாட்ரிக் என அழைக்கப்படும் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இதனால் சிறுகுடல் பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டதும், அதை தொடர்ந்து அங்கு வளர்ந்த திசுக்களால் சிறுகுடலில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்ததாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடைய மரணம் இயற்கையானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எல்விஸின் ஒரே மகள் லிசா மேரி. இவர் 2005 ஆம் ஆண்டு தந்தையின் நிறுவனத்தை கவனித்து வந்தார். அது போல் கிரேஸ்லாந்தில் உள்ள எஸ்டேட்டையும் லிசா வைத்திருந்தார். இந்த எஸ்டேட்டில் 1977ஆம் ஆண்டு லிசாவின் தந்தை எல்விஸும் சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்டார்.

 பிரான்ஸ் அதிபருக்கு சிதார் பரிசளிப்பு.. மனைவிக்கு தென் இந்தியாவில் இருந்து சென்ற கிஃப்ட்! வாவ் செம பிரான்ஸ் அதிபருக்கு சிதார் பரிசளிப்பு.. மனைவிக்கு தென் இந்தியாவில் இருந்து சென்ற கிஃப்ட்! வாவ் செம

பிரஸ்லி நிகோலஸ் கேஜ், மைக்கேல் ஜாக்சன், நடிகரும் இசையமைப்பாளருமான மைக்கேல் லாக்வுட் ஆகிய மூவரையும் திருமணம் செய்து கொண்டார், 4ஆவதாக கியோஃபை திருமணம் செய்தார். பிறகு 1994 இல் விவாகரத்து பெற்றார். லிசாவுக்கும் கியோஃப்க்கும் பிறந்த ஒரே ஒரு மகள் இருக்கிறார். லிசாவின் மகன் பெஞ்சமின் கியோஃப் 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

English summary

Do you know Singer Lisa Marie Presley who died 6 months ago related to weight loss surgery?

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *