Uncategorized

அறிவு தீ பரவ போகிறது.. கல்வியில் தமிழகம் சிறக்க கருணாநிதியே காரணம்.. முதல்வர் மு.க ஸ்டாலின் | Fire of knowledge is going to spread in TN: CM MK Stalin at kalaignar centenary library speech

Screenshot519 Tile 1689427598.jpg

சென்னை: எத்தனை தடைகள் வந்தாலும் படிப்பை மட்டும் யாரும் கைவிடக்கூடாது. படிப்பு மட்டும் தான் யாராலும் திருட முடியாத நிலையான சொத்து என்று கலைஞர் நுற்றாண்டு நூலக திறப்பு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.

மதுரையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு இருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்த பிறகு முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: – தலைநகரில் தமிழ்நாட்டில் தலைமகன் அண்ணாவின் நூற்றாண்டில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கருணாநிதி அமைத்து தந்தார். இன்று கலைஞருக்கு அவரது நூற்றாண்டில் கலைநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நான் அமைத்து இருக்கிறேன்.

இந்த நூலகத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி தருகிறது. கல்வியும் சுகாதாரமும் திராவிட மாடல் ஆட்சியில் இரு கண்கள். சொன்னதை மட்டும் அல்ல சொல்லாததையும் செய்வேன். அதற்கு சென்னையில் மருத்துவமனையும் மதுரையில் கலைஞர் பெயரில் திறக்கப்பட்டுள்ள நூலகமும் எடுத்துக்காட்டாக உள்ளது. நூலகத்தினால் தமிழகத்தில் அறிவு தீ பரவ போகிறது. அனைத்து துறையிலும் சிறந்து விளங்கியவர் கருணாநிதி. கலைஞர் கருணாநிதியே ஒரு நூலகம் தான். மாணவர் பருவத்தில்யே தமிழ் சமூகத்திற்காக போராடியவர் கருணாநிதி. திமுக என்பது அரசியல் இயக்கம் மட்டும் இல்லை. அறிவு இயக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

English summary

No one should give up on studies no matter how many obstacles come their way. Chief Minister M. K. Stalin said that education is the only fixed asset that no one can steal, while inaugurating the artist’s century library.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *