Indelible ink: தேர்தல் மை தயாரிக்கும் பணி 70% முடிந்தது… தேர்தல் மை குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!| indelible ink production completed 70 percent

Screenshot 2024 03 07 130239.png

அழியாத மை குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்…

*கள்ள ஒட்டு போடுவதைத் தவிர்க்க அழியாத மையை டெல்லியில் உள்ள தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் – தேசிய இயற்பியல் ஆய்வகம் உருவாக்கியது. இதில் சில்வர் நைட்ரேட் உள்ளது. நகம் மற்றும் ஒளிக்கு வெளிப்படும்போது எதிர்வினையாற்றி கருமையாக மை மாறுகிறது. 

*இந்த மையில் ஆல்கஹால் போன்ற ஒரு கரைப்பான் பயன்படுத்தப்படுகிறது. அதனால் கையில் பட்டவுடன் விரைவிலேயே உலர்ந்து விடுகிறது. மை வைக்கப்படும் இடத்தில் ஊதா நிற அடையாளம் ஏற்படுகிறது. மூன்று நாட்களுக்கு மேலாக மை கையில் இருக்கும்.

*10 மில்லி மை குப்பியில் இருந்து சுமார் 700 பேரின் விரல்களில் மை வைக்கலாம். 

*வாக்களித்ததற்கு ஆதாரமாக ஒருவரின் இடது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும். அவருக்கு இடது கையில் ஆள்காட்டி விரல் இல்லையென்றால், இடது கையில் உள்ள மற்ற ஏதேனும் ஒரு விரலில் மை வைக்கப்படும். இடது கையில் அனைத்து விரல்களும் இல்லையென்றால் வலது கையின் ஆள்காட்டி விரலிலோ அல்லது வேறு ஏதேனும் விரலிலோ மை வைக்கப்படும்.  

*ஒரு வேளை இரண்டு கைகளின் விரல்களும் இல்லாமல் இருந்தால் தோளின் இடது அல்லது வலது பக்கத்தில் மை வைக்கப்படும் என்று தேர்தல் விதிமுறைகள் கூறுகின்றன. 

*தேர்தல் சமயத்தைத் தாண்டி, கோவிட் தொற்று சமயத்தில் இந்த மை பயன்படுத்தப்பட்டது. தனிமைப்படுத்தலில் இருந்தவர்களை அடையாளம் காண சில மாநிலங்களில் மையை பயன்படுத்தினர்.     

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *