RIP Captain Vijayakanth: ‘விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இருந்தபோத நடந்தது என்ன?’ நினைவுகளை பகிர்ந்த ஈபிஎஸ்!-rip captain vijayakanth aiadmk general secretary eps pays homage to dmdk leader captain vijayakanth

28122023 Vijyakath Eps 1703760394539 1703760400362.jpg

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விஜயகாந்த் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சிறந்த நடிகர், அரசியலிலும், திரை உலகிலும் தனக்கு என்று தனி முத்திரை பதித்தவர். அவர் 2005ஆம் ஆண்டில் மதுரையில் மாநாடு நடத்தி தேமுதிகவை உருவாக்கினார். 2006இல் விருதாசலத்தில் எம்.எல்.ஏவாக வென்றார். 2011இல் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தேமுதிகவினர் 29 பேர் வென்றார்கள், ரிஷி வந்தியத்தில் விஜயகாந்த் அவர்கள் வென்று எதிர்கட்சித் தலைவராக ஆனார். 150 படங்களுக்கு மேல் நடித்து திரையில் பெரிய சாதனை படைத்துள்ளார். 1984ஆம் ஆண்டு ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து வரலாறு படைத்துள்ளார். அவரது 100ஆவது படம் கேப்டன் பிரபாகரன் என்ற பெயரில் பிரபலம் ஆகியது.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *