ஜம்மு காஷ்மீர்: தொழுகையின்போது ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை – பயங்கரவாதிகள் வெறிச்செயல் | jammu kashmir retired police officer killed by terrorist

Whatsapp Image 2023 12 11 At 16 21 14.jpeg

ஜம்மு – காஷ்மீரில் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகள், சமீபத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஐந்து ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து, பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவ வீரர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்,  ஓய்வு பெற்ற  72 வயதான போலீஸ் அதிகாரி முகமது ஷாஃபி மிர் என்பவர் ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் உள்ள ஒரு மசூதியில் வழக்கம் போல்  ஞாயிற்றுக்கிழமை காலை  “அசான்’ எனப்படும் தொழுகைக்கான அழைப்பை ஒலிபெருக்கி வாயிலாக செய்து கொண்டிருந்தார். 

அப்போது, அங்கு வந்த பயங்கரவாத கும்பல் மசூதி என்று கூட பாக்காமல் தொழுகை செய்து கொண்டிருந்த ஓய்வு பெற்ற  போலீஸ் அதிகாரி முகமது ஷாஃபி மிர் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி ஓடினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.  இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முகமது ஷாஃபி மிர்  வீடு மற்றும் மசூதி வளாகத்தில் பெரும் கூட்டம் கூடியது. இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள்  உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜம்மு - காஷ்மீர்

ஜம்மு – காஷ்மீர்

இந்த சம்பவம் குறித்து ஷாஃபியின் தம்பி அப்துல்கரீம் மிர் கூறுகையில், “அவர் அசானுக்காக மசூதியில் வழக்கமான பணிகளை செய்து கொண்டிருந்தார். ஆனால், இன்று(நேற்று) காலை அசானுக்கான அழைப்புக்கு இடையில் திடீரென ஒலிபெருக்கியில் சத்தம் நின்றது. 

முதலில் ஒலிபெருக்கி வேலை செய்வில்லை என்று நாங்கள் நினைத்தோம். ஆனால்,  அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதை நாங்கள் கேட்டு அதிர்ந்து போனோம் “என்று அவர்  கூறினார். மேலும் அவர் ‘அசான்’ அழைப்புக்கு இடையில் ஒரு பெரிய சத்தம் கேட்டபோது தான் வீட்டில் இருந்ததாகவும், அவை துப்பாக்கிச்சூடுகளா என்று தெரியவில்லை என்றும் கூறினார். 

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, “தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், 3 அப்பாவி பொதுமக்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர், பலர் இன்னும் மருத்துவமனைகளில் உயிருக்கு போராடி வருகின்றனர், தற்போது ஓய்வு பெற்ற எஸ்.பி முகமது ஷாஃபி மிர்-யும் கொல்லப்பட்டுள்ளார்” என்று கூறினார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *