ஜோதிடம்

1170873.jpg

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது – சுக ஸ்தானத்தில் சுக்கிரன் – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன்(வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன் – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி – தொழில் ஸ்தானத்தில் குரு – பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் உள்ளது. கிரக மாற்றம்: 22ம் தேதி – புதன் பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுபசெலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்திசாதுரியத்தால் மேலதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும்.

அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை வெளியிட வேண்டாம். கலைத்துறையினர் யதார்த்தமான படைப்புகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். மாணவர்களுக்கு புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும்.

புனர்பூசம்: இந்த வாரம் சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.

பூசம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரி கூறுவதுபடி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம்.

ஆயில்யம்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும்.

பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – புதன் – வெள்ளி

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – தைரிய வீர்ய ஸ்தானத்தில் சுக்கிரன் – சுக ஸ்தானத்தில் செவ்வாய், புதன்(வ) – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் – சப்தம ஸ்தானத்தில் சனி – பாக்கிய ஸ்தானத்தில் குரு – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் உள்ளது. கிரக மாற்றம்: 22ம் தேதி – புதன் பகவான் சுக ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

பலன்கள்: இந்த வாரம் உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்வது நன்மை தரும். ராசிநாதன் சூரியன் ஐந்தாமிடத்தில் குரு பார்வை பெறுகிறார். ராசிநாதன் இருக்கும் இடம் அவருக்கு நட்பு வீடாகவும் சார ரீதியிலும் அனுகூலமாக இருக்கிறார். லாப ஸ்தான ராசியைப் பார்க்கிறார். எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். தனலாபத்தை தருவார். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதுரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதி காணப்படும்.

கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பெண்களுக்கு உதவி கேட்டு வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். அரசியல்வாதிகள் சகாக்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். நல்ல வரவேற்பு கிடைக்கும். மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.

மகம்: இந்த வாரம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் உண்டாகும்.

பூரம்: இந்த வாரம் முன்கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோதைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறிவிடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

உத்திரம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்து சிவனை வணங்க பிரச்சினைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன்

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை: ராசியில் கேது – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் – தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய், புதன்(வ) – சுக ஸ்தானத்தில் சூரியன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி – சப்தம ஸ்தானத்தில் ராகு – அஷ்டம ஸ்தானத்தில் குரு என கிரகநிலைகள் உள்ளது | கிரக மாற்றம்: 22ம் தேதி – புதன் பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எந்த ஒரு வேலையையும் மிகவும் பொறுமையாகவும், பொறுப்புடனும் செய்து முடிப்பீர்கள். ராசிநாதன் புதன் தைரிய வீர்ய ஸ்தானத்தில் நல்ல நிலையில் சஞ்சரிக்கிறார். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். ராசிநாதனின் சார பலத்தின் மூலம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும்.

நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேலதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும்.

கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். பெண்களுக்கு நிதானமாக பேசுவது நன்மை தரும். அரசியல்வாதிகள் கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. கலைத்துறையினர் மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவர். மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. பாடங்கள் எளிமையாக தோன்றும்.

உத்திரம்: இந்த வாரம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.

அஸ்தம்: இந்த வாரம் முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சினைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.

சித்திரை: இந்த வாரம் மனகுழப்பம் தீரும். எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரண கோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: கிருஷ்ண பரமாத்மாவை வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வெள்ளி | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *