Uncategorized

தனியார் நிறுவனத்திடமிருந்து `மாதப்படி’ வாங்கினாரா பினராயி விஜயனின் மகள்? – சர்ச்சையைக் கிளப்பிய டைரி | CM’s daughter Veena Vijayan gets money from CMRL in 3 years opposition alleges

Whatsapp Image 2023 08 09 At 19 21 24.jpeg

கேரள மாநிலம், கொச்சியிலுள்ள `மினரல்ஸ் அண்ட் ரூட்டெயில் லிமிட்டெட் கம்பெனி” அலுவலகத்திலும், அதன் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா என்பவரின் வீட்டிலும் வருமான வரித்துறை 2019 ஜனவரி 25-ம் தேதி அதிரடி ரெய்டு நடத்தியது. அந்த ரெய்டில் எதார்த்தமாக ஒரு டைரி சிக்கியிருக்கிறது. அந்த டைரியில் ‘மாதப்படி’ என்ற கணக்கில் முக்கிய அரசியல் பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகளுக்குப் பணம் கொடுக்கப்பட்டது குறித்த விவரங்கள் இருந்திருக்கின்றன. அதில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் ‘எக்ஸாலாஜிக்’ கம்பெனியின் பெயரும் இருந்திருக்கிறது.

வீணா விஜயனின் கம்பெனிக்கு 2017-ம் ஆண்டு தொடங்கி மூன்று ஆண்டுகள் பணம் வழங்கப்பட்டதற்கான கணக்குகள் இருந்திருக்கின்றன. அது குறித்து விசாரித்ததில், கேரள கடற்கரையில் கருமணல் தோண்டி எடுக்க பத்து ஆண்டுகளுக்கு மேலாக முயன்றுவரும் சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தின் சாஃப்ட்வேரை அப்டேட் செய்வதற்காக பல தவணைகளாக 1.72 கோடி ரூபாய் வீணா விஜயனின் கம்பெனிக்கு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அதே சமயம் அது போன்ற ஒரு சாஃப்ட்வேர் அப்டேட் அந்த கம்பெனியில் செய்யப்படவில்லை என வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில் `மாதப்படி’ குறித்த டைரி அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. இது கேரள அரசியலில் பூகம்பத்தைக் கிளப்பியிருக்கிறது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரள முதல்வர் பினராயி விஜயன்

பினராயி விஜயனின் மகளான வீணா விஜயனின் கணவர் முகமது ரியாஸ், கேரள பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மத்திய அமைச்சர் வி.முரளீதரன் டெல்லியில் செய்தியாளர்களிடம், “கேரள முதல்வரின் மகளுக்கு ஆலுவாயில் உள்ள கருமணல் கம்பெனியிலிருந்து மாதந்தோறும் பணம் கொடுக்கப்பட்டது என்ற தகவல், அதிர்ச்சி அளிக்கிறது. எந்த அடிப்படையில் அவருக்கு அந்த கம்பெனியிலிருந்து மாதந்தோறும் எட்டு லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். அவரது கம்பெனிக்கு மூன்று லட்சமும், அவருக்கு ஐந்து லட்சம் ரூபாயும் என 8 லட்சம் ரூபாய் எதற்கு கொடுத்தார்கள் என்பதை முதல்வர் பினராயி விஜயன் விளக்க வேண்டும். ஒரு முக்கியப்புள்ளியின் நட்பின் அடிப்படையில் அந்தப் பணம் கொடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை கூறியிருக்கிறது. இவர்கள் எந்தப் பணியும் அங்கு செய்ததாக வருமான வரித்துறையின் விசாரணையில், அந்த கம்பெனி அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *