“நாமக்கல் மாவட்டத்தில் 234 சிறுமிகளுக்கு குழந்தைத் திருமணம்!” – மாவட்ட ஆட்சியரின் அதிர்ச்சித் தகவல் |234 child marriages occurred in the Namakkal district

Collector Uma.jpg

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் சாலை பாதுகாப்புக் குழு வட்டார அளவிலான சாலை பாதுகாப்பு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள சுமார் 86 பள்ளிகளைச் சேர்ந்த சாலை பாதுகாப்பு உறுப்பினர்களான பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அதோடு, இந்த விழாவில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் உமா, விழாவில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “நாமக்கல் மாவட்டத்தில் அதிகப்படியாக சுமார் 234 குழந்தைத் திருமணங்கள் நடந்திருக்கின்றன. பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் தற்போது இவர்கள் குழந்தைக்குத் தாயாகும் நிலையில் இருப்பதால், சிறப்புக் குழுக்கள் மூலம் இந்தச் சிறுமிகள் நேரடியாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

"நாமக்கல் மாவட்டத்தில் 234 சிறுமிகளுக்கு குழந்தைத் திருமணம்!'' - மாவட்ட ஆட்சியரின் அதிர்ச்சித் தகவல்

ஆட்சியர் உமா

தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களில்தான் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெறுகின்றன என்ற சூழ்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் அதிகப்படியான குழந்தைத் திருமணம் நடந்திருப்பது வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் 234 சிறுமிகள் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில், ஒரு குழந்தைக்குத் தாயாகக்கூடிய நிலையில் இருப்பது வேதனையளிக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *