ஆடு மேய்ப்பவர் தந்த உளவு.. 17000 அடியில் தீரமாக போரிட்ட மாவீரன்.. யார் இந்த கார்கில் விஜய் பத்ரா? | Vijay Diwas 2023: Do you know the story of Kargil War hero Captain Vikram Batra?

Kargil1 1690362112.jpg

India

oi-Shyamsundar I

Google Oneindia Tamil News

திராஸ்: கார்கில் போர் வெற்றி தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த போரில் இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்த கேப்டன் விக்ரம் பத்ரா நாடு முழுக்க நினைவு கூறப்பட்டு வருகிறார்.

1999ல் இந்தியா பாகிஸ்தான் இடையே காஷ்மீரில் மோதல் நிலவியது. இதுவே கார்கில் போருக்கும் வழிவகுத்தது. கார்கில் பகுதியை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயன்றது. இந்தியா இதற்கு எதிராக கடுமையாக போராடி வென்றது . 1999ல் காஷ்மீரின் கார்கில் பகுதியில், மே தொடங்கி ஜூலை மாதம் வரை கார்கில் போர் நடந்தது. ஆனால் அதற்கு முன்பே பல வருடங்களாக இந்த பகுதியில் பிரச்சனை நிலவி வந்தது.

Vijay Diwas 2023: Do you know the story of Kargil War hero Captain Vikram Batra?

கார்கில் பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றியதில் இருந்தே, இரண்டு நாடுகளுக்கும் பெரிய மோதல் நிலவி வந்தது. இந்த நிலையில்தான் கார்கிலை மீட்க முயன்ற இந்திய படைக்கும், பாகிஸ்தான் படைக்கும் இடையில் பெரிய போர் உருவானது. முழு வீச்சில் இந்த போர் நடந்தது. இந்தியாவின் கை கார்கில் போரில் தொடர்ந்து உயர்ந்தே இருந்தது.

இந்திய படை வலுவாக இருந்த காரணத்தால் தொடர்ந்து அதிரடி தாக்குதல் நடத்தி வந்தது. உலக நாடுகள் கணித்தது போலவே, இந்தியா இந்த போரில் வென்றது. முக்கியமாக காஷ்மீரில் பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைக்கும் அளவிற்கு இந்தியா களமிறங்கிய ஆபரேஷன் விஜய் இன்று நினைவு கூறப்படுகிறது. கார்கில் போர் வெற்றிக்கு வழி வகுத்த ஆப்ரேஷன் விஜய் திட்டத்தை கொண்டாடும் வகையில் இந்த நாள் நினைவு கூறப்படுகிறது.

இதற்காக இன்று தேசிய போர் நினைவு சின்னத்தில் இதற்காக எல்லா வருடமும் மரியாதை செலுத்தப்படுகிறது. இந்த கார்கில் வெற்றி பாகிஸ்தானில் மட்டும் இந்தியாவின் வலிமையை பறைசாற்றவில்லை. மொத்த உலகத்திற்கும் இந்தியாவின் வலிமை அப்போதுதான் தெரிந்தது. முக்கியமாக ஆசிய கண்டத்தில் இந்தியா முக்கியமான நாடாக மாறியது.

அது என்ன ஆபரேஷன் விஜய்: கார்கில் போர் 1999ல் நடைபெற்றது. 1999 மே 3ம் தேதி தொடங்கிய போர் ஜூலை 26ம் தேதி வரை நடந்தது. இந்த போர் கார்கில் பகுதியை கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டது. காஷ்மீரில் பாகிஸ்தான் செய்திருந்த ஆக்கிரமிப்பை காலி செய்யவே இந்த போர் நடந்தது. கார்கில் பகுதியில் இருந்து டைகர் மலை , ரொலோலிங் மலை, பத்ரா டாப், ஸ்ரீநகர் லே தேசிய நெடுஞ்சாலை ஆகிய இடங்களை கைப்பற்ற இந்த போர் நடந்தது.

உளவு தகவல்: ஆடு மேய்த்தவர் ஒருவர் கொடுத்த உளவு தகவலின் மூலம் கார்கில் உள்ளே பாகிஸ்தான் ராணுவம் புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டு, இந்திய படைகள் தயார் செய்யப்பட்டது. இங்கு முதலில் நடந்த சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் 6 பேர் பலியானார்கள். கேப்டன் சோரப் கைலா உட்பட 6 ராணுவ வீரர்கள் பலியானார்கள். இதன்பின்தான் கார்கில் போர் அதிகாரபூர்வமாக தொடங்கியது,

கார்கிலை இணைக்கும் அனைத்து சாலையிலும் குண்டுகளை பாகிஸ்தான் வீசியது. இதனால் கார்கில் தனித்து விடப்பட்டது. இதனால் இந்தியா விமானப்படை மூலம் போரை பல இடங்களில் முன்னெடுத்தது. இந்திய விமானப்படைக்கு உதவும் வகையில் இருந்து டைகர் மலையை பாகிஸ்தானை கைப்பற்றியது. இந்த போரில் கார்கில் பகுதியில் இருந்த டைகர் மலைதான் மிக முக்கியமான திருப்பு முனையாக இருந்தது .

முதலில் இந்திய விமானப்படை இங்கு பெரிய அளவில் உதவ முடியாமல் திணறியது. காரணம் டைகர் மலை நம்முடைய கையில் இல்லை. இதற்காக இந்தியா போட்ட திட்டம்தான் ஆபரேஷன் விஜய். ஆனால் இந்த ஆபரேஷன் தொடக்கத்தில் இந்தியா கொஞ்சம் சறுக்கியது. வரிசையாக MiG-21 மற்றும் MiG-27, மிக் 17 விமானத்தை இந்தியா இழந்தது. இதில் ஒரே நாளில் 4 விமானப்படை அதிகாரிகள் பலியானார்கள்.

ஆனால் தொடர்ந்து விடாமல் பாகிஸ்தான் வீரர்களை இந்திய விமானப்படை சுற்றி வளைத்து. பாகிஸ்தான் டாங்கிகளிடம் இருந்து தப்பித்து அசாத்திய திறமையுடன் இந்திய விமானப்படை டைகர் மலைக்கு சென்றது , டைகர் மலையை மொத்தமாக விமானப்படை உதவியுடன் சுற்றி வளைப்பதுதான் இந்த ஆபரேஷன் விஜயின் திட்டமாகும். அது இந்தியாவிற்கு கை கொடுத்தது. விமானப்படை உதவியுடன், டைகர் மலை பகுதியை ஜூலை மாதம் இந்தியா கைப்பற்றியது.

MiG-21 மற்றும் MiG-27, மிக் 17 என்று நவீன விமானங்கள், உளவு தகவல்கள், பாகிஸ்தானின் வீக்னஸ், எங்கே அடித்தால் எளிதாக வெல்லலாம் என்று சரியான திட்டமிடல் மூலம் பாகிஸ்தான் கைப்பற்றி இருந்த டைகர் மலையை இந்தியா மீட்டது. இந்த போரில் இந்தியாவிற்கு முதல் வெற்றி கிடைத்தது ஆப்ரேஷன் விஜய் வெற்றிபெற்றபின்தான். பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து இந்த போர் பிளான் போடப்பட்டது என்கிறார்கள் .

இதனை அடுத்த வரிசையாக இந்தியா அடுத்தடுத்த ஆக்கிரமிப்பு பகுதியை கைப்பற்றி வெற்றியை நோக்கி நகர்ந்தது. இந்த நிலையில் சரியாக ஜூலை மாதம் இரண்டாம் வாரம் கார்கில் பகுதியில் அனைத்து இடங்களையும் இந்தியா கைப்பற்றியது. பாகிஸ்தான் பிடித்து வைத்திருந்த டைகர் மலை , ரொலோலிங் மலை, பத்ரா டாப், ஸ்ரீநகர் லே தேசிய நெடுஞ்சாலை தொடங்கி எல்லா இடங்களையும் இந்தியா மொத்தமாக கைப்பற்றியது. இதன் மூலம் ஜூலை 26ம் தேதி கார்கில் பகுதியை மீண்டும் கைப்பற்றி, இந்தியா கார்கில் போரில் வென்றது.

ஹீரோ விக்ரம் பத்ரா: ஆபரேஷன் விஜயின் இந்த டைகர் மலையை பிடிப்பதற்காக மோதலில் கேப்டன் விக்ரம் பத்ராவின் துணிச்சல் மிகப்பெரிய அளவில் நாடு முழுக்க கவனிக்கப்பட்டது. போரின் போது 24 வயதே ஆன இவர் “டைகர் ஆப் டிராஸ்” என்று அழைக்கப்பட்டார்.

ஜம்மு காஷ்மீரில் 13வது பட்டாலியனில் பணி செய்து கொண்டு இருந்த இவர் போரின் போது பாயிண்ட் 4875ஐ பாகிஸ்தானிடம் இருந்து மீட்கும் பணியில் களமிறக்கப்பட்டார். இது டிராஸ் செக்டர் பகுதியில் 17000 அடி உயரத்தில் பாகிஸ்தான் வசம் இருந்த பகுதி ஆகும். இந்தியாவிற்கு சொந்தமான இதை பாகிஸ்தான் ஆக்கிரமித்து இருந்தது.

இந்த பகுதிக்கு செல்லவே முடியாத சூழ்நிலை இருந்ததால் பாகிஸ்தான் ஆக்கிரமித்த பின் இதை மீட்பது கடினம் ஆனது. இதையடுத்தே விக்ரம் பத்ரா டீம் இங்கே துணிச்சலாக சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ள களமிறங்கியது. இங்கே நிறைய மலை முகடுகள், குகைகள் போன்ற அமைப்புகள் இருந்ததால் உள்ளே இருந்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எளிதாக சரமாரியாக தாக்கியது. ஆனாலும் கடும் தாக்குதலுக்கு இடையில் துணிச்சலாக விக்ரம் பத்ரா படை உள்ளே சென்றது.

இந்த பாயிண்ட் 4875ஐ நெருங்கிய விக்ரம் பத்ரா அங்கே இருந்த பாகிஸ்தான் முகாம்களை தாக்கி அழித்தார். பின்னால் இந்திய வீரர்கள் எளிதாக வருவதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தார். இதில் அவர் கடுமையாக காயம் அடைந்து இருந்தாலும் விடாமல் தொடர்ந்து பாயிண்ட் 4875ஐ நோக்கி சென்றார். கடைசியில் காயங்களுடன் போரிட்டு பாயிண்ட் 4875ஐ புள்ளியை இவர்கள் பிடித்தனர்.

24-வது கார்கில் வெற்றி தினம்- திராஸ் போர் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வீர வணக்கம்!24-வது கார்கில் வெற்றி தினம்- திராஸ் போர் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வீர வணக்கம்!

இந்த புள்ளியை பிடித்தது கார்கில் போரில் இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் அங்கே ஏற்பட்ட காயம் காரணமாக பாயிண்ட் 4875ல் வென்று கொண்டாட்டங்களுக்கு இடையே விக்ரம் பத்ரா வீரமரணம் அடைந்தார். இந்தியாவை காத்த ஹீரோகளில், கார்கில் வீரர்களில் விக்ரம் பத்ரா முக்கியமானவர். இவரின் தீரத்தை பாராட்டி இந்திய ராணுவத்தின் உயரிய விருதான பரம் வீர் சக்ரா விருது இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary

Vijay Diwas 2023: Do you know the story of Kargil War hero Captain Vikram Batra?

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *