Chennai Madipakkam School Student Dies Kalkuvari Check Details

306080 Student.jpg

சென்னை, மடிப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த 10 வகுப்பு மாணவி வேதிகா கல்குவாரி குட்டையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொலையா..? தற்கொலையா..? 

காணாமல் போன மாணவி:

சென்னை மடிப்பாக்கத்தை அடுத்த உள்ளகரம் பகுதியை சேர்ந்தவர், கார்த்திக். இவருக்கு வேதிகா என்ற 15 வயது மகள் உள்ளார். வேதிகா, நங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 17ம் தேதி காலை 8 மணிக்கு பள்ளிக்கு சென்ற வேதிகா, பள்ளி முடிந்து அன்று மாலை வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால், வேதிகாவின் தந்தை கார்த்திக் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

காணாமல் போன வேதிகாவின் தந்தை புகார் கொடுத்ததை அடுத்து, இதனை வழக்குப் பதிவு செய்து மடிப்பாக்கம் காவல்துறையினர் வேதிகாவை தேடி வந்தனர். 

மேலும் படிக்க | 9 வயது சிறுவன் கொலையான கொடூரம்: ஒரு வருடத்திற்கு பிறகு வழக்கில் திடீர் திருப்பம்..!

சடலமாக மீட்பு:

இந்த நிலையில் நேற்றிரவு தலைகணஞ்சேரி கல்லுக்குட்டையில் பள்ளி சீருடையுடன் சடலம் ஒன்று மிதப்பதாக பல்லாவரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பல்லாவரம் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தாம்பரம் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு சடலத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட உடலை அவர்கள் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இதையடுத்து நடந்த விசாரணையில் காணாமல் போன பள்ளி மாணவி வேதிகாவின் சடலம்தான் கல்குவாரி குட்டையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது என தெரியவந்தது.

கொலையா..? தற்கொலையா..? 

மாணவி வேதிகாவின் மரணம் குறித்து விசாரிக்கையில், சரிவர படிப்பு வராததால் பெற்றோர் படிக்க சொல்லி திட்டியது தெரியவந்துள்ளது. இதனால், வேதிகா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் படிக்க | சைதாப்பேட்டையில் பயங்கரம்..! ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பெண்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *