தொகுதி மேம்பாடு.. ஒவ்வொரு எம்எல்ஏவிற்கும் மூன்று கோடி.. ரூ.351 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு | Tamil Nadu government order to allocate Rs.3 crore to each MLA

Collage 1689954807.jpg

Chennai

oi-Velmurugan P

Google Oneindia Tamil News

சென்னை: 2023-24 நிதியாண்டுக்கான எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டுக்காக ரூ.351 கோடியை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தமிழக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து வருகிறது தமிழக அரசு.

Tamil Nadu government order to allocate Rs.3 crore to each MLA

இந்த தொகையில் எம்.எல்.ஏ.-க்கள் தங்களுடைய தொகுதியில் கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்துவார்கள். அரசு பள்ளி கட்டிடங்கள், சாலை வசதிகள், சாக்கடை வசதிகள், பேருந்து நிறுத்த வசதிகள், குடிநீர் தொட்டிகள், நூலகம், அங்கன்வாடி மையங்கள், சுகாதாரத் திட்டங்கள் உள்பட பல்வேறு அடிப்படை அத்தியாவசிய திட்டங்களை தனது தொகுதி மக்களுக்கு எம்எல்ஏக்கள் நிதியை விடுவித்து வேலை செய்ய அதிகாரிகளை அறிவுறுத்தலாம்.

எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி இல்லாமல் பல்வேறு பணிகளுக்கு அரசும் தனியாக நிதி ஒதுக்கி சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உதாரணமாக மிகப்பெரிய மேம்பாலம் அமைப்பது, மிகப்பெரிய பேருந்து நிலையம் அமைப்பது, பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவது, மழைநீர் வடிகால் அமைப்பது உட்பட பல்வேறு பணிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

Tamil Nadu government order to allocate Rs.3 crore to each MLA

அதே நேரம் தமிழக அரசு ஒவ்வொரு எம்எல்ஏ விற்கும் மூன்று கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியாக ஒதுக்குகிறது. தொகுதியின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு எம்எல்ஏவால் இந்த தொகுதி மேம்பாட்டு நிதி பயன்படுத்தப்படுகிறது.

2022- 2023 ஆம் ஆண்டிற்கான எம்.எல்.ஏ.தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 702 கோடியில் 50சதவீதமான ரூ. 351 கோடியை தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் விடுவித்தது.

Tamil Nadu government order to allocate Rs.3 crore to each MLA

இந்த நிலையில் 2023-24 நிதியாண்டுக்கான எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டுக்காக ரூ.351 கோடிக்கு நிதி விடுவிப்பு செய்து ஜூலை மாதத்தில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நிர்வாக அனுமதி அளிக்கப்பட்ட ரூ.702 கோடியில் 50% நிதியை விடுவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ரூ.3 கோடி வீதம் ரூ.702 கோடி நிதி ஒதுக்க நிர்வாக அனுமதி அளித்துள்ளது அதில் 50 சதவீத தொகையான ரூ.351 கோடிக்கு நிதி விடுவிப்பும் செய்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆணை வெளியிடப்பட்டது .

English summary

The Tamil Nadu government has ordered release of Rs.351 crore for the development of assembly constituency ( MLA fund) for the financial year 2023-24.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *