HBD Nallakannu: 7 ஆண்டுகள் சிறை.. மக்களுக்கான தொடர் போராட்டங்கள்..98 வயதிலும் இடதுசாரி.. நல்லகண்ணு ஐயாவின் பிறந்தநாள்!-special article on the birthday of senior communist leader nallakannu

Nallakannu 1703545683138 1703545694442.png

கம்யூனிஸ்ட் கட்சியில் நல்லகண்ணு: 15 வயது இருக்கும் போதே, நல்லகண்ணு இடதுசாரி இயக்கச் செயல்பாடுகளில் தீவிர ஆர்மாக இருந்தவர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பஞ்சம் நிலவிய காலகட்டங்களில் இரண்டாயிரம் நெல் மூட்டையை ஒருவர் பதுக்கிவைத்துள்ளார் என்பதை அறிந்து ஜனசக்தி என்னும், இந்திய கம்ய்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையில் எழுதி, அதை கலெக்டர் கவனத்திற்குக் கொண்டு சென்று அரசு இயந்திரத்தை நடவடிக்கை எடுக்க வைத்தார். தந்தையிடம் சொல்லாமல் எளிய மக்களுக்கான போராட்டங்களில் பங்கெடுத்தார். இதனால் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையைப் பெற்ற நல்லகண்ணு, சுதந்திரம் பெறும்தருவாயில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிரிட்டிஷ் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 7ஆண்டுகளில் சிறையில் இருந்து ரிலீஸ் ஆனார். பின் 18ஆவது ஆனவுடன் அதிகாரப்பூர்வமாக தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகாரப்பூர்மாக இணைத்துக் கொண்டார். ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி சுற்றுவட்டார பட்டியல் இன மக்களின் வாழ்வினை மேம்படுத்த கணிசமான போராட்டங்களை முன்னெடுத்தார். சாதியற்ற சமூகத்தை உருவாக்கத் தொடர்ந்து குரல் கொடுத்தார், நல்லகண்ணு. 

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *